ETV Bharat / city

பிரபல நடிகரும், டான்ஸருமான பரத் தற்கொலை - Film industry

சென்னை: மன உளைச்சல் காரணமாக பிரபல நடிகரும், டான்ஸருமான பரத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல நடிகரும், டான்ஸருமான பரத் தற்கொலை
author img

By

Published : May 17, 2019, 7:05 AM IST

சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் தனது நண்பர்களோடு டான்ஸர் பரத் (35) வசித்துவந்தார். இவர் பிரபல நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்சுடன் தொடர்ந்து இயங்கி வந்தவர். மேலும், இயக்குநர் ஏ. ஆர்.முருகதாஸின் குழந்தைகளுக்கு நடன பயிற்சியும் அவர் அளித்துவந்தார். அதுமட்டுமல்லாமல் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு டான்ஸர் பரத் மன உளச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் விருகம்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் டான்ஸர் பரத்தின் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பரத்திற்கு ஒரு கையில் விரல்கள் இல்லாமல் ஊனமுற்று இருந்தாலும் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என நடனத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இருப்பினும் அவரால் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் போனதாலும், திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியாலும் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

சென்னை விருகம்பாக்கத்தில் நடிகரும் பிரபல டான்ஸருமான பரத் தூக்கிட்டு தற்கொலை விருகம்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை...

சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள வீட்டில் தனது நண்பர்களோடு டான்ஸர் பரத் வசித்து வந்துள்ளார். இவருக்கு வயது 35 ஆகிறது. நேற்று இரவு மன உளைச்சல் ஏற்பட்டதன் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்...

மின்சாரக் கனவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ராகவா லாரன்ஸ் உடன் தொடர்ந்து இயங்கி வருவதாகவும். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்  அவர்களின் பிள்ளைகளுக்கு இவர் டான்ஸ் பயிற்சி கற்று தருவதாகவும், சுமார் 1000 நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றி இருப்பதாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்தனர்...

சம்பவம் குறித்து உடனடியாக விருகம்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பரத்திற்கு ஒரு கையில் விரல்கள் இல்லை ஊனமுற்று இருப்பதாகவும் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்று அவர் நடனத்தில் ஈடுபட்டு வந்தாலும் கூட அதிலும் பெரிய அளவில் சாதனை நிகழ்த்த முடியவில்லை என்ற விரக்தி இருந்து வந்ததாக கூறப்படுகிறது...

திருமணம் ஆகவில்லை என்ற ஒரு விரக்தியும் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆன்மீகத்திலும் டான்ஸிலும் மிகவும் கவனம் செலுத்தி வந்த டான்ஸர் பரத்தின் மறைவு எங்களுக்கு மிகப்பெரிய இழப்பாக இருப்பதாக அவரது நண்பர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.