நேரு உள் விளையாட்டரங்கில் மருத்துவக் கலந்தாய்வு இரண்டு கட்டமாக நடந்து வருகிறது. இந்தக் கலந்தாய்வில் கடந்த 7ஆம் தேதி கலந்து கொண்ட தீக்ஷா என்ற மாணவி போலியான சான்றிதழ் அளித்து கலந்து கொண்டதாக மருத்துவக்கல்வி கூடுதல் இயக்குநர் செல்வராஜன், பெரியமேடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து மாணவி தீக்ஷா மற்றும் பல் மருத்துவரான அவரது தந்தை பாலச்சந்திரன் ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், இருவரையும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க இரண்டு முறை காவல்துறையினர் தரப்பில் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், தனிப்படை அமைக்கப்பட்டு இருவரையும் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் மாணவி தீக்ஷா மற்றும் அவரது தந்தை பாலச்சந்திரன் ஆகியோர், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக, அவர்களது பாஸ்போர்ட்டை முடக்க திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காவல் ஆய்வாளர் அடித்து ஆட்டோ ஒட்டுநர் மரணம்! ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு