சென்னை: தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளான பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 வகையான மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்குக் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் சுமார் 16 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்களுக்கு நவம்பர் 9ஆம் தேதி வரை 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஆன்லைன் மூலம் நவ. 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நவ.15ஆம் தேதிவரை சமர்ப்பிக்கக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு செயலாளர் வசந்தாமணி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 835 பேருக்கு கரோனா பாதிப்பு