இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்திருப்பதாவது:
- அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் முழுமையாகச் செயல்படும் நிலையில் இருக்க வேண்டும்.
- கல்வித் தொலைக்காட்சி மூலம் மாணவர்கள் பாடம் கற்பிப்பதை ஒவ்வொரு ஆசிரியரும் உறுதி செய்ய வேண்டும்.
- மாணவர்களின் வீட்டிலுள்ள தொலைக்காட்சி, மடிக்கணினி, செல்போன் குறித்த விவரங்களையும் கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாவது தவணை செலுத்திக்கொண்டிருக்க வேண்டும்.
நீட் தேர்வு பயிற்சி
- அரசுப்பள்ளி மாணவர்களுக்கு E-box மூலம் நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது. நீட் பயிற்சி பெறும் மாணவர்களின் ஒவ்வொரு நாள் பயிற்சியையும் பொறுப்பாசிரியர் கண்காணிக்க வேண்டும்.
- நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்குத் தலைமையாசிரியர்கள் அறிவுரை வழங்குதல் வேண்டும்.
நீட் தேர்வு கட்டணம்
- நீட் தேர்வு விண்ணப்பக் கட்டணம் செலுத்த இயலாத பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்குப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம், தன்னார்வலர்கள், விருப்பமுள்ள ஆசிரியர்கள் ஆகியோர் மூலம் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
- மேற்கூறிய மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயார் செய்து, மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஜூலை 28ஆம் தேதிக்குள் ஒப்படைத்தல் வேண்டும்.
அலகுத் தேர்வுகள்
- நடப்பு கல்வியாண்டில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் முதல் அலகு தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
- கடந்த கல்வியாண்டில் அலகுத் தேர்வு நடைமுறையே இந்தாண்டும் பின்பற்றப்பட உள்ளது.
- மாணவர்கள் அலகுத் தேர்விற்கு முழுமையாகத் தயாராகும்படி பாட ஆசிரியர்களுக்குத் தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.
இதையும் படிங்க: நீட் தேர்வு ரத்து கிடையாது - ஒன்றிய சுகாதாரத் துறை இணையமைச்சர்