ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 5PM

author img

By

Published : Oct 10, 2021, 5:29 PM IST

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்..

Top 10 News @ 5 PM
Top 10 News @ 5 PM

1.தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை;பொதுமக்கள் அதிர்ச்சி!

கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக ரூ.30-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி, ரூ.65 வரை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

2.ஆன்லைன் ரம்மியால் நேர்ந்த விபரீதம்!

வாணியம்பாடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாடக்கூடாது என்று பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

3.பிரதமர் நரேந்திர மோடி மாபெரும் ஜனநாயகத் தலைவர்- அமித் ஷா

பிரதமர் நரேந்திர மோடி மாபெரும் ஜனநாயகத் தலைவர் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

4.சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் அணுகுண்டு தந்தை காலமானார்!

சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் அணுகுண்டு தந்தை அப்துல் காதிர் கான் (Abdul Qadeer Khan) இன்று (அக்.10) காலமானார். அவருக்கு வயது 85. அப்துல் காதிர் கான், பாகிஸ்தானில் 1970களில் அணு ஆயுத சோதனையை நிகழ்த்தினார்.

5.தடுப்பூசி போடாதவர்களுக்கு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்

கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் அதிகமானோர் தடுப்பூசி போடாதவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

6.உலக மனநல தினம் இன்று!

உலக மனநல தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

7.கண்டெய்னர் லாரிகளில் அதிக பாரம் - தனி கமிட்டி அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கண்டெய்னர் லாரிகளில் அதிக பாரம் ஏற்றுவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தனி கமிட்டி ஒன்று அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

8.தமிழ்நாட்டில் 331 பேருக்கு டெங்கு காய்ச்சல் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழ்நாடு முழுவதும் 331 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

9.இன்ஜினியரிங் கவுன்சிலிங்: 50 விழுக்காடு இடங்கள் கூட நிரம்பவில்லை!

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான பொதுப்பிரிவு இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், 378 கல்லூரிகளில் 50 விழுக்காட்டிற்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10.தாக்கப்பட்ட நாய் - களமிறங்கிய பிராணிகள் நலச்சங்கம்

கோயம்புத்தூரில் வளர்ப்பு நாயைக் கடுமையாகத் தாக்கிய உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.