ETV Bharat / city

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1PM - chennai district

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

Top 10 news @1PM
Top 10 news @1PM
author img

By

Published : Oct 19, 2021, 1:18 PM IST

1.கல்யாணராமன் கைது; விளைவுகள் வேறுமாதிரி இருக்கும் - எச்சரித்த அண்ணாமலை

கல்யாணராமனை கைதுசெய்திருப்பதை எந்தவிதத்திலும் பாஜக ஏற்றுக்கொள்ளாது. இதுபோன்ற செயலை பாஜக பார்த்துக்கொண்டு இருக்கும் என திமுக ஆட்சியாளர்கள் நினைத்தால் விளைவுகள் வேறுமாதிரி இருக்கும் என அண்ணாமலை கடுமையாக எச்சரித்துள்ளார்.

2.பொதுவாழ்வில் பயணிக்கும் எங்களுக்குச் சோதனைகள் வழக்கமானவை - விஜயபாஸ்கர்

சோதனைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவந்தாலும் அதிமுகவினராகிய நாங்கள் மனம் கலங்கமாட்டோம்; பொதுவாழ்வில் பயணிக்கும் எங்களுக்குச் சோதனைகள் வழக்கமானவை என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

3.இந்தி படிக்க கட்டாயப்படுத்திய சொமெட்டோ: மாறாத மொழி ஆதிக்க மனநிலை!

உணவு டெலிவரியில் ஏற்பட்ட தவறுக்குப் பணத்தைத் திருப்பி அளிக்கக் கோரிய வாடிக்கையாளரிடம், மொழி தெரியாததால் பணத்தைத் திருப்பி அளிக்க இயலாது என சொமெட்டோ வாடிக்கையாளர் சேவை மையம் பதிலளித்துள்ளது.

4.நெம்மேலி கடல்நீரை சுத்திகரிக்கும் ஆலையில் ஸ்டாலின் ஆய்வு

நெம்மேலி கடல்நீரைச் சுத்திகரிக்கும் ஆலையில் இரண்டாவது அலகின் கட்டுமான பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வுசெய்தார்.

5.விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவரின் அலுவலகத்திற்குச் சீல்!

சென்னையில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்குத் தொடர்புடையவரான சந்திரசேகர் என்பவரது அலுவலகம் திறக்க முடியாத காரணத்தால் சீல்வைக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

6.புதுச்சேரி அரசு நிர்வாகம் ஸ்தம்பிப்பு - நாராயணசாமி தாக்கு

அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்த எவ்வித நடவடிக்கையும் முதலமைச்சர் ரங்கசாமியால் எடுக்கப்படவில்லை என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

7.நடிகை ஸ்ரீவித்யா நினைவுநாள் இன்று

புகழ்பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஸ்ரீவித்யா நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

8.புதுச்சேரி அரசு நிர்வாகம் ஸ்தம்பிப்பு - நாராயணசாமி தாக்கு

9.பிக்பாஸ் வீட்டில் நாணயம் கடத்தல் - வெளியான புரொமோ

நாமினேஷனில் இடம்பெற்றுள்ள 10 நபர்களில் ஒருவர் நாமினேஷனிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பை பிக்பாஸ் கொடுத்துள்ளார்.

10.பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனை

எதிர்வரும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் ஊரக வளர்ச்சித் துறையினால் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை நடத்தினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.