சட்டப்பேரவையில் இன்று
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (செப்.02) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சிறு குறு தொழில் ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
![சட்டப்பேரவை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12944392_js.jpg)
ஓபிஎஸ் மனைவி உடல் பெரியகுளத்தில் அடக்கம்
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் நேற்று (செப்.01) உயிரிழந்தார். அவரது உடல் இன்று (செப்.02) தேனி பெரியகுளத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
![ஓபிஎஸ் மனைவி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12944392_ui.jpg)
கொடநாடு கொலை குறித்த விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கின் மறு விசாரணை இன்று (செப்.02) ஊட்டி நீதிமன்றத்தின் விசாரணைக்கு வருகிறது. இதில், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
![கொடநாடு வழக்கு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12944392_df.jpg)
உயர்கல்வி வழிகாட்டி புத்தகம் வெளியீடு
சென்னையில், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி புத்தகம் இன்று (செப்.02) வெளியிடப்படுகிறது.
![வழிகாட்டி புத்தகம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12944392_sdsddfsdfsf.jpg)
தெய்வத்திடம் முறையிடம் போராட்டம்
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, இன்று (செப்.02) மாவட்டம் முழுவதுமுள்ள கோயில்களில் முன் நின்று தெய்வத்திடம் முறையிடம் போராட்டம் நடத்தவுள்ளதாக இந்து முன்னணி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
![விநாயகர் சதுர்த்தி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12944392_ij.jpg)
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பதிவு
திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தாலுகா அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ தேசிய அடையாள அட்டை பதிவு செய்யும் முகாம் இன்று (செப்.02) முதல் தொடங்குகிறது.
![அடையாள அட்டை பதிவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12944392_aaaa.jpg)
4ஆவது டெஸ்ட் போட்டி
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி இன்று (செப்.02) லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
![டெஸ்ட் போட்டி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12944392_sd.jpeg)
மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (செப்.02) நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
![மழை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12944392_dfdf.jpg)