ETV Bharat / city

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS - காலை 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

காலை 7 மணி செய்திச் சுருக்கம்
காலை 7 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Sep 9, 2021, 6:58 AM IST

1.செப்.12இல் 1600 சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வரும் 12ஆம் தேதி ஆயிரத்து 600 சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் நடத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

2.ஓட்டுநர்களை ஊக்குவிக்க முதலமைச்சரின் விருதுகள்

விபத்தின்றி பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு முதலமைச்சரின் விருதுகள் வழங்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. ஓய்வூதிய பண பலன்களை வழங்கிட அரசு முடிவு

ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதிய பணப்பலன்களை வழங்கிட அரசு 497.32 கோடி ரூபாய் அனுமதியளித்துள்ளதாகக் கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4.அகரம் அகழாய்வுத் தளத்தில் கண்டறியப்பட்ட ‌மேலும் ஒரு உறைகிணறு!

கீழடி அகரத்தில் நடைபெற்றுவரும் ஏழாம் கட்ட அகழாய்வின்போது மேலும் ஒரு உறை கிணறு கண்டறியப்பட்டுள்ளது.

5.கோயில் நிலத்தில் அமைக்கப்பட்ட தார்ச்சாலையை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

அறநிலையத் துறையிடம் அனுமதி பெறாமல் கோயில் நிலத்தில் அமைக்கப்பட்ட தார்ச்சாலையை அகற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

6. 2000 மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்ய அரசு ஒப்பந்தம்

ஜெர்மன் நிதி நிறுவன நிதியுதவியுடன் இரண்டாயிரம் மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்ய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

7. சென்னை கடற்கரை - கொருக்குப்பேட்டை இடையே ரயில் பாதை அமைக்கத் திட்டம்

சென்னை கடற்கரை கொருக்குப்பேட்டை இடையே 3ஆவது, 4ஆவது புதிய ரயில் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

8.அரசுப் பேருந்துகளில் திருக்குறள் பலகைகள் பொருத்த திட்டம்

அரசுப் பேருந்துகளில் திருக்குறளின் நெறிகளைப் பரப்புவதற்காக திருக்குறளும் அதன் பொருளும் அடங்கக்கூடிய பலகைகள் பொருத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9.சிவகார்த்திகேயன் வெளியிடும் ‘எண்ணித்துணிக’ டீசர்

’எண்ணித்துணிக’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்டார். தற்போது இதன் டீசரை சிவகார்த்திகேயன் வெளியிடவுள்ளார்.

10. டி20 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு - தோனிக்கு புதிய பொறுப்பு

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் கேப்டன் தோனி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.