ETV Bharat / city

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - EtvBharat Top 10 News

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்.

etv-bharat-top-10-news-1-pm
etv-bharat-top-10-news-1-pm
author img

By

Published : Aug 10, 2020, 12:59 PM IST

செல்போன் சார்ஜரில் மின்கசிவு: தாயுடன் 2 பிஞ்சு குழந்தைகள் உயிரிழப்பு

கரூர்: செல்போன் சார்ஜர் மூலம் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தாய் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அப்போது ஏற்பட்ட புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு தூங்கிக் கொண்டிருந்த இரண்டு பிஞ்சு குழந்தைகளும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மீதமுள்ள அமோனியம் நைட்ரேட் 3 நாட்களில் அப்புறப்படுத்தப்படும் - காவல் ஆணையர்

சென்னை: மணலியில் வைக்கப்பட்டுள்ள அமோனியம் நைட்ரேட்டை 2, 3 நாட்களில் அப்புறப்படுத்தும் பணியில் சுங்கத்துறையினர் ஈடுபட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

'ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி', முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

சென்னை: ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை: கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விவரங்கள்

சென்னை: மாநகராட்சியில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் விழுக்காடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குளித்தலை எம்.எல்.ஏ.,வுக்கு கரோனா பாதிப்பு!

கரூர்: குளித்தலை எம்.எல்.ஏ.,வுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பாழடைந்த கிணற்றில் பாய்ந்த பைக் - இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருத்தணி அடுத்த ஆர்கே பேட்டை அருகே பாழடைந்த கிணற்றில் மோட்டார் பைக் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

5177 மாணவர்கள் தேர்ச்சி முடிவுகள் எங்கே?

சென்னை : இன்று (ஆக. 10) அரசு தேர்வுத் துறை வெளியிட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் ஐந்தாயிரத்து 177 மாணவர்களின் தேர்வு முடிவுகள் விடுபட்டுள்ளன.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கும் தற்சார்பு இந்தியா வாரம்!

டெல்லி: பாதுகாப்புத் துறைக்கான 101 வகையான ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 'தற்சார்பு இந்தியா வாரம்' என்ற புதிய திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கிவைக்கிறார்.

சுதந்திர தின விழா - புதுச்சேரியில் இறுதி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி!

புதுச்சேரி: சுதந்திர தின விழாவிற்கான இறுதி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் கரோனா தடுப்பு பாதுகாப்புடன் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

எல்லைப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி, தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.