ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @9am - ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @9am

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @9am

author img

By

Published : Jan 1, 2021, 9:26 AM IST

1.அனைவருக்குமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் - குடியரசு தலைவர்

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அனைவருக்குமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

2.வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் எனவும்; காணும் பொங்கல் தினத்தன்று மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

3.பெரும்பான்மையுடன் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்: முதலமைச்சர் பழனிசாமி

பெரும்பான்மையுடன் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

4.தமிழகத்தில் நாளை மறுநாள் கரோனா தடுப்பூசி ஒத்திகை! - ராதாகிருஷ்ணன் தகவல்!

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நாளை மறுநாள் (ஜன. 2) நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

5.937 பேருக்கு கரோனா பாதிப்பு - அதிலிருந்து 1,038 பேர் குணமடைந்தனர்!

தமிழ்நாட்டில் மேலும் 937 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது எனவும், இங்கிலாந்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த 24 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

6.சியாச்சின் மலையேற்ற வீரர் கர்னல் நரேந்திர குமார் காலமானார்!

சியாச்சின் பனி மலையை பாதுகாக்க உதவிய கர்னல் நரேந்திர குமார் வயது முதிர்வு காரணமாக காலமானார்.

7.கரோனாவுக்கு எதிரான போரை தொடர வேண்டும் - உலக சுகாதார அமைப்பு

கரோனாவுக்கு எதிரான போரை உலக நாடுகள் தொடர வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

8.காஷ்மீரில் பிறந்த பெண்ணுக்கு ஜோ பைடனின் டிஜிட்டல் அணியில் முக்கிய பதவி

அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஜே பைடனின் டிஜிட்டல் அணியில், காஷ்மீரில் பிறந்த ஆயிஷா ஷாவுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

9.Australia vs India: உமேஷ் யாதவ் விலகல் ; ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு?

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் விலகியுள்ளார்.

10.விஜய் ஆண்டனியின் 'கோடியில் ஒருவன்' டீசர் எப்போது?

விஜய் ஆண்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி தெரியவந்துள்ளது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.