ETV Bharat / city

5 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 5PM

author img

By

Published : Jan 5, 2021, 5:16 PM IST

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்தி சுருக்கம்...

5 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 5PM
5 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 5PM

1.10 நாள்களில் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி

சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் தயாரித்த கரோனா தடுப்பூசிகளுக்கு ஜனவரி 3ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், அனுமதி வழங்கப்பட்டதிலிருந்து 10 நாள்களுக்கும் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2.ஆறு மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் அடுத்த ஆறு மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என, வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

3.பறவைக் காய்ச்சலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக என சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

4.மக்களின் பிரச்சினைகளை ஆட்சியாளர்கள் காது கொடுத்து கேட்பதில்லை - கே.என். நேரு

மக்களின் பிரச்சினைகளை ஆட்சியாளர்கள் காது கொடுத்து கேட்பது கிடையாது என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு குற்றஞ்சாட்டினார்.

5.ரேஷன் கடைகளில் ஆளுங்கட்சியினர் பேனர்: திமுக முறையீடு

பொங்கல் பரிசு டோக்கன்களில் அரசியல் தலைவர்களின் படங்கள் இடம்பெறக் கூடாது என உத்தரவிட்ட நிலையில், ரேஷன் கடைகள் முன் ஆளுங்கட்சியினர் பேனர்கள் வைத்திருப்பதாக கூறி, இதுசம்பந்தமாக வழக்கு தொடர அனுமதி கோரி திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

6.தமிழ்நாடு போல் புதுச்சேரி, கேரளாவில் தைப்பூசத்திற்கு பொதுவிடுமுறை; கோரிக்கை வைக்கும் சீமான்

தைப்பூச திருவிழாவுக்கு பொது விடுமுறை அளித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதுச்சேரியிலும், கேரளாவிலும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தைப்பூசம் கொண்டாட ஏதுவாக விடுமுறை விட அந்தந்த மாநில முதலமைச்சர்களை வலியுறுத்தியுள்ளார்.

7.மம்தாவின் கோட்டையில் மற்றொரு விக்கெட் காலி!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான லக்ஷ்மி ரத்தன் சுக்லா, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

8.தொடர்ந்து உயர்வின் பாதையில் இந்தியப் பங்குச்சந்தைகள்

நாட்டில் கோவிட்-19 நிலைமை மேம்பட்டுவருவதால் இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர் உயர்வைக் கண்டுவருகின்றன.

9.கங்குலி நாளை டிஸ்சார்ஜ் - மருத்துவமனை தகவல்

கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் சௌரவ் கங்குலி நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10.சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் பணமோசடி வழக்கில் கைது!

பண மோசடி வழக்கில் ஹேம்நாத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.