ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திகள் Top 10 news @1pm - important news

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திகள் Top 10 news @1pm

author img

By

Published : Feb 25, 2021, 1:38 PM IST

1. அரசுப் பணியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு

அரசுப் பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

2. 9, 10, 11ஆம் வகுப்பு மாணாக்கர் ஆல்பாஸ்! - இபிஎஸ் அதிரடி

9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சிப் பெறுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

3. உடனுக்குடன்: பிரதமர் மோடி தமிழ்நாடு பயணம்!

2016இல் வாக்களித்த மக்களை ஏமாற்றிவிட்டது காங்கிரஸ் கட்சி. இந்த முறை வாக்களிக்கும் முன்னர் வளர்ச்சிக்கு எதிரானவர்களை பொதுமக்கள் நிராகரிக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியின் வளர்ச்சி அரசியலுக்கு வாக்களிக்க வேண்டும்.

4. சகாயத்தின் புதிய அரசியல் கலாசாரம் சாத்தியமா?

சகாயம் அரசியலுக்கு வருவதையும் அதற்கான நோக்கத்தையும் அவர் உறுதிசெய்திருக்கிறார். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வெறும் நேர்மை என்ற பிம்பத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசியல் செய்யமுடியாத நிலை இருக்கிறது

5. ’நாராயணசாமி ஆட்சி கலைந்ததற்கு திமுகதான் காரணம்’

புதுவையில் காங்கிரஸ் ஆட்சி கலைந்ததற்கு காரணமே திமுகதான் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

6.மாணாக்கருடன் ஜனநாயகம் குறித்து கலந்துரையாடும் ராகுல்!

அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக மாணவர்களுடன் மார்ச் 2ஆம் தேதி காணொலி மூலமாக ராகுல் காந்தி ஜனநாயகம் குறித்து கலந்துரையாடுகிறார்.

7.தாகம் தீர்த்த ஜார்க்கண்டின் 'மலை' மனிதன்!

ஜார்க்கண்டின் தலைநகரான ராஞ்சியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது குண்தி மாவட்டம். ஒருபுறம் பார்த்தால் நன்கு வளர்ச்சி அடைந்த நகரம், ஆனால் மறுபுறம் பார்த்தால் குடிநீர், சாலை வசதி, மின்சாரம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். தண்ணீர் பிரச்னை காரணமாக தனது மனைவி அமோன் பஹான் பாதிப்படுவதை அறிந்த சாடா பஹான் என்ற மலை மனிதன் மலைப்பகுதியில் கிணறு வெட்டி தண்ணீரை சேமித்து, கிராம மக்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்கியுள்ளார்.

8.இலங்கை - பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் 5 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இலங்கை பிரதமரும், பாகிஸ்தான் பிரதமரும் கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

9.பகலிரவு டெஸ்ட்: ரோஹித் அரைசதம்; நிதான ஆட்டத்தில் இந்தியா!

இங்கிலாந்து அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களை எடுத்துள்ளது.

10.'நண்பன்' இல் முடிந்த பயணம் 'தளபதி 65' இல் தொடங்குகிறது - மனோஜ் பரமஹம்சா

விஜய் நடிப்பில் உருவாகவுள்ள 'தளபதி 65' படத்தில் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.