1.அன்புமணி மகள் திருமணம் - முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு
மாநிலங்கவை உறுப்பினரும், பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸின் மகள் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று (செப்.13) நடைப்பெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி மரக்கன்று, பசுமைக்கூடை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
2.பாஜக அலுவலகத்தில் பணம் எண்ணும் இயந்திரம் எதற்கு - செந்தில்குமார் எம்.பி கேள்வி
பாஜக எம்.எல்.ஏ அலுவலகத்தில் எதற்கு லாபம் என்று எழுதப்பட்டுள்ளதென்றும், பணம் எண்ணும் இயந்திரம் எதற்கு என்றும் தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.
3.ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவு
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கவும், தரமான அரிசி வழங்குவதை உறுதிப்படுத்தவும் குழு அமைக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
4. விவசாயிகள் பெட்ரோல், டீசல் தயாரிக்கலாம் - நிதின் கட்கரி
100 விழுக்காடு வாகனத்தில் எத்தனால் எரிபொருள் பயன்பாட்டிற்கான திட்டத்தை அரசு விரைவில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
5. ”நீட் தேர்வு மசோதா: நல்லதே நடக்கும் என்று நம்புவோம்”
நீட் தேர்விற்கு விலக்கு பெறுவற்கு இயற்றப்பட்ட சட்டத்திற்கு அனுமதி பெறுவது தொடர்பாக குடியரசு தலைவரிடம் யார் சென்று பேசுவது என்பது குறித்தும், தேவைப்பட்டால் அழுத்தம் கொடுப்பதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
6. முறைகேடாக பதிவு செய்யப்பட்ட 88 பட்டாக்களை ரத்து செய்ய கோரிய வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் அரசு நிலத்தை சட்டவிரோதமாக பட்டா போட்டுக் கொடுத்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து பட்டாக்களை ரத்து செய்ய உத்தரவிட கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
7.உளுந்தூர்பேட்டை கொலை வழக்கு - 4 பேருக்கு ஆயுள் தண்டனை!
உளுந்தூர்பேட்டை அருகே கொரட்டூர் கிராமத்தில் துக்க நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
8. யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலைமை... ரசிகர்கள் வருத்தம்...
கார் விபத்துக்கு பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை யாஷிகாவின் அண்மைகால புகைப்படம் ஒன்று அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
9. ஆட்டை பலி கொடுத்த விவகாரம்: நடிகர் ரஜினி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்!
நடிகர் ரஜினி நடித்த ’அண்ணாத்த’ பட கட் அவுட் முன் ஆட்டை பலி கொடுத்து ரத்த அபிஷேகம் செய்த ரஜினி ரசிகர்கள் மீதும், அச்செயலை தூண்டியதாக நடிகர் ரஜினி மீதும் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
10. மெல்ல கசந்துபோகும் திருமண வாழ்க்கை... தம்பதிகள் செய்ய வேண்டியது என்ன?
'நாம் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று' என்று தான் பெரும்பாலான தம்பதிகள் தங்களின் திருமண வாழ்க்கை குறித்த அயர்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். ஆனால், நம் வாழ்கையில் சில மாற்றங்களை செய்தால், திருமண பந்தத்தில் புது வாசம் வீச வாய்ப்பிருக்கிறது.