ETV Bharat / city

7 மணிச் செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM - TAMIL TOP 10

ஈடிவி பாரத்தின் 7 மணிச் செய்திச் சுருக்கம்...

7 மணிச் செய்திச் சுருக்கம்
7 மணிச் செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jul 29, 2021, 7:04 PM IST

Updated : Jul 29, 2021, 7:13 PM IST

1. EXCLUSIVE INTERVIEW: நான் விளையாடியதில் சிறந்த போட்டி அந்த போட்டிதான் - சரத் கமல்

சீன வீரர் மா லாங் உடனான போட்டிதான் தன்னுடைய சிறந்த போட்டி என்று இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் 'ஈடிவி பாரத்'-க்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

2. பத்திரிகை துறையினர் மீதான வழக்குகள் ரத்து

பத்திரிகை துறையினர் மீது போடப்பட்ட 90 வழக்குகளை ரத்து செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

3. 7 கோடி ஃபாலோயர்ஸ்: மாஸ் காட்டும் மோடி

பிரதமர் மோடியின் ட்விட்டர் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை ஏழு கோடியை கடந்த நிலையில், #CongratsModiJiFor70M என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி உள்ளது.

4. வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஸ்டாலின்: கண்டித்த எடப்பாடி மீது வழக்குப்பதிவு

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 1500 பேர் மீது சேலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

5. தமிழர் பண்பாட்டை கண்டால் வயிறு எரியுதா.. நல்லா எரியட்டும்!

தமிழர்களின் தொன்மை பற்றி அகழாய்வு பணிகள்,அறிவியல்பூர்வமான ஆதாரங்களை வழங்கி வருவதால் சிலருக்கு வயிறு எரிகிறது, அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ள வேண்டாம்; தொடர்ந்து அகழாய்வு நடைபெறும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.

6. NEETஇல் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு!

நீட் தேர்வு அகில இந்திய கோட்டாவில் நடப்பாண்டு முதல் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு(OBC) 27% இட ஒதுக்கீடு வழங்க சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

7. 'கீழடி, சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்'

தமிழ்நாட்டில் தொல்லியல் அகழாய்வு நடைபெற்றுவரும் கீழடி, சிவகளையை சங்ககால வாழ்விடப் பகுதியாக அறிவித்து அப்பகுதிகளில் திறந்தவெளி அருங்காட்சியகங்கள் அமைக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

8. 25 லட்சம் பார்வையாளர்கள் - தெறிக்கவிடும் 'இன்னா மயிலு' பாடல்!

கவின் நடிப்பில் உருவாகியுள்ள 'லிஃப்ட்' படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய 'இன்னா மயிலு' பாடல் 25 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

9. இளைய சூப்பர் ஸ்டாரான தனுஷ்!

தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தனுஷின் பிறந்தநாளுக்கு இளைய சூப்பர் ஸ்டார் என்ற போஸ்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

10. டோக்கியோ ஒலிம்பிக்: வெளியேறினார் மேரி கோம்

பெண்கள் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை மேரி கோம் கொலம்பிய வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

Last Updated : Jul 29, 2021, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.