1.பாரத் பந்த் - பல்வேறு மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் பெரும்பாலான மாநிலங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
2.பாரத் பந்த்: புதுச்சேரியில் பேருந்துகள், மதுக்கடைகள் அடைப்பு!
விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் நடந்துவரும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக பேருந்துகள், மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், புதிய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
3.உழவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகப் பிறந்தநாள் கொண்டாட வேண்டாமென முடிவெடுத்த சோனியா காந்தி!
நாட்டில் நிலவும் உழவர்கள் போராட்டம், கரோனா பரவல் காரணங்களால் நாளை (டிச. 09) தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என சோனியா காந்தி முடிவெடுத்துள்ளார். இது குறித்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் (அமைப்பு) கே.சி. வேணுகோபால் அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கேக் வெட்டுவது உள்ளிட்ட அனைத்துவித கொண்டாட்டங்களையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
4.16ஆவது பிரவேசி பாரதிய திவாஸ் மாநாடு!
வெளிநாடுவாழ் இந்தியர்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் கொண்டாடப்படும் பாரதிய திவாஸ் மாநாட்டை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கிவைப்பார் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
5.அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிக்க அனுமதி!
அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிகள் பயணிக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
6.உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இந்தியர் நியமனம்!
உலக சுகாதார நிறுவனத்தின் புதிய அறக்கட்டளையின் தலைமை நிர்வாகியாக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
7.'ரைட்டர்' அவதாரம்: சமுத்திரக்கனியின் லேட்டஸ்ட் அப்டேட்
சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்திற்கு 'ரைட்டர்' (Writer) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
8.'சேதத்தை இயங்கவைக்கும் மண்ணின் போர்வீரர்கள் உழவர்கள்' - ப்ரீத்தி ஜிந்தா
அரசுக்கும் உழவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை விரைவில் நல்ல முடிவை எட்டி பிரச்சினை தீர்க்கப்படும் என்று நம்புவதாக நடிகை ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.
9.காபி டே சிஇஓ பொறுப்புக்கு சித்தார்த் மனைவி மாளவிகா தேர்வு!
மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படும் காபி டே சங்கிலித் தொடர் உணவகத்தின் நிறுவனர் சித்தார்த்தின் மனைவி மாளவிகா ஹெக்டே, காபி டே குழுமத்தின் தலைமை செயல் அலுவலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
10.ஐஎஸ்எல்: ஏடிகேவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஜாம்ஷெட்பூர் எஃப்சி!
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஏடிகே மோகன் பாகன் அணியை வீழ்த்தி, தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.