ETV Bharat / city

அத்தியாவசியப் பொருள்கள் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும் - முதலமைச்சர் - ration card apply

நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் தரமானதாகவும், தங்குதடையின்றியும் கிடைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

cm-mk-stalin
cm-mk-stalin
author img

By

Published : Jul 3, 2021, 3:05 PM IST

பொதுமக்கள் நலனுக்காக கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், நடப்பாண்டில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை.3) தலைமை செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் "நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் தரமானதாகவும், தங்குதடையின்றியும் கிடைக்க வேண்டும். குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு காலதாமதமின்றி குடும்ப அட்டைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் கடனுதவி கோரும் சுயஉதவிக் குழுக்கள், சிறு வணிகர்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் தொழில்முனைவோர் உள்ளிட்டவர்களில் தகுதியானவர்களுக்கு கடன் வழங்கிட வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.

அத்துடன், "பொது விநியோகத் திட்டத்தை முழுவதும் கணினிமயமாக்குதல், நியாய விலைக்கடைகளை ஒரே துறையின் கீழ் கொண்டு வருதல், நியாய விலைக்கடைகளுக்கு சொந்தக் கட்டடங்கள், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், பெண் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்துதல், பொருட்கள் போக்குவரத்தை கண்காணித்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தலைமை செயலாளர் வெ. இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ஊரடங்கில் புதிய தளர்வுகள் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.