1. தமிழ்நாட்டில் 76 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.
2. 39 புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.
3. மேலும் 37 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க அரசு முடிவு.
4. பாதாள சாக்கடை அமைக்கப்படாத பகுதிகளுக்கு பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்தவும் அரசு முடிவு.
5. சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் நிலத்தில் கலக்காமல் இருப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை.
6. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே இயங்கி வருகின்ற 14 தொடர் கண்காணிப்பு நிலையங்களை ஆய்வு செய்ததில், நிரந்தர நீரோட்டம் உள்ள தாமிரபரணி ஆற்றில் உள்ள மூன்று தொடர் கண்காணிப்பு நிலையங்கள் தொடர்ந்து இயக்கவும், மற்ற பதினோரு தொடர் கண்காணிப்பு மையங்களில் உள்ள நீர்நிலைகளில் நீரோட்டம் தொடர்ந்து இல்லாத காரணத்தினால், மாதாந்திர மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
7.மாநிலத்தின் நீர், காற்று, ஒலி ஆகியவற்றின் தரம் பல்வேறு திட்டங்களின் வாயிலாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:காக்க... காக்க... சுற்றுச்சூழல் காக்க - நடிகர் சூர்யா ட்வீட்