சென்னை: எண்ணூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் 660 மெகாவாட் மின் உற்பத்திக்கான விரிவாக்கப் பணிகள் திட்டமிட்டு அதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்கும் கருத்துக் கேட்புக் கூட்டம் கடந்த 6ஆம் தேதி நடைபெற இருந்தது.
ஆனால் கரோனா பரவல் காரணமாகக் கருத்துக் கேட்புக் கூட்டம் ஜனவரி 13ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் கரோனா பரவல் அதிகரிப்பு, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் 19ஆம் தேதிக்கு இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற இருந்த நிலையில் எண்ணூர் சிவன் படைவீதி, காமராஜர் நகர், வள்ளுவர் நகர், சத்தியான் மூர்த்தி நகர், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் எண்ணூரில் அனல்மின் நிலையம் வேண்டாம் எனக்கூறி தங்கள் வீட்டு வாசலில்
- ETPS வேண்டாம்
- இன்னொரு அனல் மின் நிலையம் வேண்டாம்
என்ற வாசகங்கள் அடங்கிய கோலமிட்டு தங்களது எதிர்ப்பைப் பதிவுசெய்தனர்.
இதையும் படிங்க: பொருள்கள் மட்டுமல்ல; நீதியும் இனி ஆன்லைனில்தான்!