ETV Bharat / city

#EngineersDay... எதுக்குனு சேர்ந்தவங்களுக்கும் தெரியல; சேர்த்தவங்களுக்கும் தெரியல... - இன்ஜினியர் தினம்

அதற்கு பிறகுதான் ஆட்டமே ஆரம்பம். இன்ஜினியர் முடிச்சு ரெண்டு வருஷம் ஊர சுத்திட்டு, நியூஸ் சேனலுல வர விவாதங்கள பார்த்துட்டு, சென்னைக்கு வேலை தேடி போறப்ப சொல்லவே வேணாம் மனசு திருப்பி அலைபாயும்...

நண்பன்
author img

By

Published : Sep 15, 2019, 2:19 PM IST

ஒரு உயிர் உருவாகும்போதே அந்த உயிர் இன்ஜினியராகணும் முடிவு செய்யப்பட்ட தலைமுறைகள் 90ஸ் கிட்ஸ். பத்தாவது முடிச்சியா கண்ண மூடிட்டு ஒன்னு பயலாஜி க்ரூப்ல சேரு, இல்லையா கம்ப்யூட்டர் சைன்ஸ் க்ரூப்ல சேரு. ஏனா அப்பதான் இன்ஜினியராக முடியும்னு தாத்தா, அப்பா, அம்மா, அக்கா இப்படி எல்லோரும் அடுக்கடுக்கா ஆர்டர் போடுவாங்க. அதுல வியக்கத்தக்க விஷயம் என்னனா காதுகுத்து, கல்யாணத்துல பார்க்காத சொந்தமெல்லாம் கார்ல வந்து பையன இன்ஜினியராக்க இந்த 2 க்ரூப்ல சேருங்கனு போற போக்குல சொல்லிட்டு போய்டுவாங்க.

அதுக்கப்பறம் மேலே சொன்ன ரெண்டு க்ரூப்ல ஒன்னுல சேர்ந்து தத்தி தத்தி தாவுதே நெஞ்சம்னு வேற வேற க்ரூப்க்கு மனசு அலைபாய்ஞ்சு ஒருவழியா ப்ளஸ் டூல 700லேர்ந்து 900க்குள்ள மார்க் எடுத்துட்டா ரிசல்ட் வரதுக்கு முன்னாடியே சுத்துப்பட்டு ஊருக்குள்ள எந்த இன்ஜினியரிங் காலேஜ் நல்ல காலேஜ்னு விசாரிச்சு கவுன்சிலிங்குக்கு போலாமா இல்ல டொனேஷன்ல போலாமானு யோசிச்சு எதுக்கும் டொனேஷன முதல் ஆப்ஷனா வெச்சுக்குவோம் என யோசித்து ஆடு எப்படா தலையாட்டும்னு காத்திட்டு இருப்பாங்க.

ஒரே மந்தை ஆடுகள்
ஒரே மந்தை ஆடுகள்

பிளஸ் 2 ரிசல்ட் வந்ததும் ஆடு தலையாட்டுதோ இல்லையோ அந்த ஆட்ட இன்ஜினியர் காலேஜ்க்குள்ள தள்ள டொனேஷன் பணத்த ரெடி பண்ண அலைய ஆரம்பிப்பாங்க. ஆனா 90ஸ் ஆடோ ஆர்ட்ஸ நோக்கி பார்வைய திருப்பும். அந்தப் பார்வையை உடனடியாக குருடாக்க, ”நம்ம சித்தப்பாவோட வேலை பார்க்குறவரோட பையன் வெளிநாட்டுல இன்ஜினியரா வேலை பார்க்குறாரு. அவரோட கம்பெனில உனக்கு நாலு வருஷம் கழிச்சு கண்டிப்பா அம்பதாயிரம் சம்பளத்துல நல்ல வேலை வாங்கிக் கொடுப்பாருனு, சித்தப்பாவோட தூரத்து சொந்தங்க வண்டி கட்டிட்டுவந்து ஒரு வசனத்த தூவிட்டு போய்டுவாங்க. எதையுமே சொல்ல முடியாம அந்த 90ஸ் ஆடு அமைதியா இருக்க, மௌனம் சம்மதத்திற்கு அறிகுறினு இன்ஜினியர் காலேஜ்ல தள்ளிவிட்ருவாங்க.

அந்த ஆடும் வேற வழியில்லாம காலேஜ்க்குள்ள போனா அந்த ஆடு மாதிரியே ஆர்ட்ஸையோ, வேற எதையோ நோக்கி பார்வைய திருப்பிய சில ஆடுகளும் அங்க வந்து சேரும். அதுக்கப்புறம் வேவ் லெங்த் ஒத்துப்போக இந்த ஆடுங்க சேர்ந்துட்டு அரசியல் பேசும், சினிமா பேசும், ஷார்ட் ஃபிலிம் எடுக்கும், ஆல்பம் போடும். இதுனால அரியர்ஸ் வெச்சி, அட்டெண்டன்ஸ் லாக் ஆகி அட்மிஷன் அப்போ வந்த அப்பாவ செமஸ்டருக்கு செமஸ்டர் காலேஜ்க்கு வரவைக்கும். ஹெச்.ஓ.டி. ரூம்ல அவர் வறுத்தெடுக்க, வீட்ல அப்பா பொளந்தெடுக்க நாலு வருஷத்துல மூனு வருஷத்து அரியர நாலாவது வருஷத்துல க்ளியர் பண்ணிட்டு பெருமூச்சுவிட்டா அடுத்த கண்டம் நோ ட்யூஸ்.

வாழ்க்கை ராட்டினந்தாண்டா
வாழ்க்கை ராட்டினந்தான்டா

கிளார்க்லேர்ந்து, லைபிரெரி இன்சார்ஜ், ஹெச்.ஓ.டினு பலர்ட்ட கையெழுத்து வாங்குறதுக்கு மூன்றாம் உலகப்போர அட்டெண்ட் பண்ணிட்டு வந்துடலாம். அப்படி வெச்சு செய்வாங்க. ஒருவழியா அத முடிச்சிட்டு வந்தபிறகுதான் அப்பாடா ஒரு வழியா தப்பிச்சோம் பொழைச்சோம்னு வெளியே வந்தா...

அதற்குப் பிறகுதான் ஆட்டமே ஆரம்பம். இன்ஜினியர் முடிச்சு ரெண்டு வருஷம் ஊர சுத்திட்டு, நியூஸ் சேனலுல வர விவாதங்கள பார்த்துட்டு, சென்னைக்கு வேலை தேடி போறப்போ சொல்லவே வேணாம் மனசு திருப்பி அலைபாயும். அதுல ஒரு ஆடு அசிஸ்டெண்ட் டைரக்டர் ஆக ட்ரை பண்ணும், இன்னொரு ஆடு கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கும், கால் சென்ட்டருக்கு ட்ரை பண்ணும். அப்போ ‘வேலை இல்லாதவன்டா வேலை தெரிஞ்சவன்டா வீரமான வேலைக்காரன்’ அப்டி ரிங் டோன் களைகட்டும். இப்டி திருப்பி வெட்டியா இருக்கும் காலம் ரெண்டு வருஷம் எக்ஸ்டெண்ட் ஆகி வீட்ல திட்டு வாங்கி, காசு வாங்கி, சொந்தபந்தத்துகிட்ட அட்வைஸ் வாங்கி, எந்த சொந்தபந்த விழாவுக்கும் போகாம ஒதுங்கி வேற வழியில்லாம கிடைச்ச வேலையில சிக்கி நாட்கள நகர்த்திட்டு இருக்கும் பல இன்ஜினியர் ஆடுங்க.

இன்ஜினியர் ஆடுகள்
இன்ஜினியர் ஆடுகள்

இந்த ஆடுகளுல குறிப்பிட்ட ஆடுகதான் இன்ஜினியர் இல்லாம தனக்கு பிடிச்ச வேலையை மேய்ந்து கொண்டிருக்கின்றன. இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்னென்னா ஒரு இன்ஜினியர் ஆடு அசிஸ்டெண்ட் டைரக்டரா இருந்துச்சுனா அதுக்கு உள்ள கிரியேட்டிவிட்டி விஸ்காம் படிச்சிருக்க பலருக்கு வராது. அதுபோலவே எந்த துறைல இன்ஜினியர் ஆடு இருந்தாலும் அதுதொடர்பான விஷயங்களை அந்த ஆடு உடனடியா கத்துக்குட்டு தன்னோட முத்திரைய அதுல ஆழமா பதிச்சிரும். அதற்கு உதாரணம் இப்போ நிறைய மீடியால இன்ஜினியரிங் ஸ்டூடண்ட்ஸ் இருக்காங்க. ஏனா இன்ஜினியர் ஸ்டூடண்ட்னா ஒரு ஃபயர் இருக்கும்.

பொறியாளர் தினம்
பொறியாளர் தினம்

இன்னிக்கி இன்ஜினியரிங்கிற்கு சம்பந்தம் இல்லாத சில துறைகளில் அதிகம் இருப்பது இன்ஜினியரிங் படித்தவர்கள்தான். எப்படி எதுக்காக கணக்கு படிச்சோம்னு இப்போ யோசிக்கிறோமோ, அதுபோல எதுக்கு இன்ஜினியரிங் சேர்ந்தோம்னு சேர்ந்தவங்களுக்கும் தெரியல, சேர்த்தவங்களுக்கும் இப்ப தெரியல... இருந்தாலும் அனைத்துத் துறைகளிலும் ஜொலித்துக்கொண்டிருக்கும் இன்ஜினியர்களுக்கு Happy engineers day....

Intro:Body:

Engineers day story

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.