ETV Bharat / city

பொறியியல் படிப்புகளுக்கான இடங்கள் குறையவில்லை: உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா - B Tech

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான இடங்கள் குறையவில்லை என உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா தெரிவித்துள்ளார்.

engineering
author img

By

Published : May 25, 2019, 7:27 AM IST

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர், பொறியியல் படிப்புகளான பி.இ, பி.டெக் படிப்புகளுக்கான இடங்கள் குறையவில்லை. இந்த ஆண்டு ஒரு லட்சத்து 75 ஆயிரம் இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 77 ஆயிரம் இடங்கள் இருந்தன. இந்தாண்டு 2,000 இடங்கள் மட்டுமே குறைவாக உள்ளன. அந்த இடங்களுக்கும் 8 பொறியியல் கல்லூரிகள் கூடுதல் இடங்கள் கேட்டு விண்ணப்பித்துள்ளன எனக் கூறினார்.

மேலும், பொறியியல் படிப்பில் கலந்தாய்வின் மூலம் சேர்வதற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்ந்தால், அவர்களுக்கு கல்வி கட்டணம் குறைவாக வசூலிக்கப்படும். அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேருவதற்கு விண்ணப்பிக்க ஒரு வார காலம் மட்டுமே அவகாசம் உள்ளது. எனவே, கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி,பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் மாதம் ஆறாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அப்போது மாணவர்கள் கல்லூரி குறித்த முழு விவரங்களையும் அறிந்து கொள்வதற்கு தகவல் கையேடு அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொறியியல் படிப்புகளுக்கான இடங்கள் குறையவில்லை

Intro:பிஇ பிடெக் படிப்பில் இடங்கள் குறையவில்லை
உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா பேட்டி

Body:சென்னை, பி இ,பிடெக் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்குரிய இடங்கள் எதுவும் குறையவில்லை என உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக 43 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் மாணவர்கள் நேரில் வந்து விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் அவர்கள் வீடுகளில் இருந்தும் விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் படிப்பில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 75 ஆயிரம் இடங்கள் உள்ளன கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 77 ஆயிரம் இடங்கள் இருந்தன. இந்தாண்டு 2,000 இடங்கள் மட்டுமே குறைவாக உள்ளது. அந்த இடங்களுக்கும் 8 பொறியியல் கல்லூரிகள் மற்றும் கூடுதல் இடங்கள் கேட்டு விண்ணப்பித்துள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு ஒதுக்கீடு செய்வதன் மூலம் நிரப்பப்படும்.
பொறியியல் படிப்பில் கலந்தாய்வின் மூலம் சேர்வதற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்ந்தால் அவர்களுக்கு கல்வி கட்டணம் குறைவாக உள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மாணவர்கள் சேருவதற்கு விண்ணப்பிக்க ஒரு வாரம் காலம் மட்டுமே அவகாசம் உள்ளது. எனவே கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ 27,000 வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு அந்தத் துறைகளின் மூலமாக உயர் கல்வி பெறுவதற்கான கல்வி கட்டணம் முழுவதும் அரசால் வழங்கப்படுகிறது. மாணவர்கள் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மூலம் சேர்ந்தால் அவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் கிடையாது.
பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் மாதம் ஆறாம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அப்போது மாணவர்கள் கல்லூரி குறித்த முழு விவரங்களையும் அறிந்து கொள்வதற்கு தகவல் கையேடு அளிக்கப்படும். ஏற்கனவே தகவல் கையேடு தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டை விட இந்தாண்டு மாணவர்கள் தற்போது வரை அதிகமாகவே விண்ணப்பித்துள்ளனர்.
கடந்தாண்டை காட்டிலும் இந்த ஆண்டு 7 கல்லூரியில் மட்டும் தான் மாணவர் சேர்க்கை குறைத்துள்ளன என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.