போக்குவரத்து காவலர்களுக்கு காவல் நண்பர்கள் குழு மற்றும் துரை ஃபவுண்டேஷன் இணைந்து ஊக்க பானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை இயக்குநர் பிரதீப்.வி.ஃபிலிப் கலந்துகொண்டு காவலர்களுக்கு ஊக்க பானத்தை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதீப்.வி.ஃபிலிப், ” தமிழ்நாடு முழுவதும் கரோனா தடுப்புப் பணியில் காவலர்கள் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையில் தகுந்த இடைவெளி மற்றும் முகக்கவசங்களை அணிய பொதுமக்களுக்கு சிறப்பான வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், சென்னையில் மட்டும் இதுவரை 200 காவலர்கள் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் கூடிய விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவார்கள்.
கரோனா தடுப்புப் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வரும் போக்குவரத்து காவலர்களுக்காக, 4,000 ஊக்க பானங்களை காவல் நண்பர்கள் குழு மற்றும் துரை ஃபவுண்டேஷன் அமைப்பு இணைந்து வழங்கியுள்ளனர். மேலும் இவர்கள் சென்னையில் சிக்கி தவிக்கும் 1000 குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கும் தினமும் உணவு வழங்கி வருகின்றனர் “ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு ரயில் சேவை இல்லை - புலம்பெயர்ந்தோர் ஏமாற்றம்