ETV Bharat / city

END CARD போடும் SIT ? - ramajayam case

அதோ நெருங்கிவிட்டோம் இதோ நெருங்கிவிட்டோம் என மலைக்கோட்டை மாநகரை மலைக்கவைத்துக்கொண்டிருந்த ஒரு விஷயத்துக்கு விரைவில் எண்டு கார்டு போட்டுவிடுவார்கள் என்று காவல்துறையில் கிசுகிசுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

END CARD போடும்  SIT ?!
END CARD போடும் SIT ?!
author img

By

Published : May 14, 2022, 12:44 PM IST

Updated : May 14, 2022, 1:06 PM IST

அதோ நெருங்கிவிட்டோம் இதோ நெருங்கிவிட்டோம் என மலைக்கோட்டை மாநகரை மலைக்கவைத்துக்கொண்டிருந்த ஒரு விஷயத்துக்கு விரைவில் எண்டு கார்டு போட்டுவிடுவார்கள் என்று காவல்துறையில் கிசுகிசுக்க ஆரம்பித்து விட்டார்கள். மீசைக்கார அமைச்சரின் ஆசைத்தம்பியின் உடல் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி கல்லணை ரோட்டில் பொன்னுரங்கபுரத்தில் கொலைசெய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அந்த வழக்கில் உள்ளூர் போலிசுக்கு ஒரு துப்பும் கிடைக்காத நிலையில் அதே வருடம் ஜூன் மாதம் கடைசியில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது நீண்ண்ண்ண்ட... கால விசாரணைக்குப்பின் அவர்களுக்கும் ஒன்றும் துப்பு கிடைக்காத காரணத்தால் அந்த வழக்கு அவர்கள் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க 2017ம் ஆண்டு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

சிபிஐயாலும் இலக்கை எட்ட முடியவில்லை இந்நிலையில் கடந்த பத்தாண்டு கால ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்டவுடன் மீண்டும் திமுக ஆட்சி மலரவே மாநில காவல்துறையில் சிறப்பு புலனாய்வு குழு வசம் 09.02.22ம் தேதியன்று ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் எண்டுகார்டு போடப்போவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

புதியதாக அமைக்கப்பட்டிருக்கும் டீமில் பழனியில் குடிகொண்டிருக்கும் ஆண்டவன் பெயரைக்கொண்ட டிஎஸ்பியை நோக்கி விரலை காண்பிக்கிறார்கள் அவர்தான் இந்த வழக்கின் முடிச்சை அவிழ்த்ததாக சொல்கிறார்கள், முதல்வரின் பார்வைக்கு கோப்பு அனுப்பப்பட்டுவிட்டதாம் கூடிய விரைவில் ஜெயம் கிட்டிய செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் அதுவரை சாமியோவ் சாமியோவ்னு சொல்லிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.

Last Updated : May 14, 2022, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.