ETV Bharat / city

சென்னை கனமழை - மின்சாரம் தாக்கி 5 பேர் பலி

சென்னையில் கனமழை காரணமாக மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மின்சாரம் தாக்கி இதுவரை 5 பேர் பலி
மின்சாரம் தாக்கி இதுவரை 5 பேர் பலி
author img

By

Published : Nov 13, 2021, 7:20 AM IST

சென்னை: 6 நாட்களாகத் தொடர்ந்து பெய்த மழை காரணமாக சென்னையில் பல சாலைகள் மற்றும் ஓடைகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளித்தது. மேலும், வீட்டினுள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுறும் நிலை ஏற்பட்டது.

கடந்த 6 நாட்களில் மின்சாரம் பாய்ந்து இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் மாதவரம் வேர்ஹவுஸில் இருந்து வெளியே வரும் போது தேங்கிக் கிடந்த மழை நீரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அதே போல் நேற்று முன்தினம் (நவ.11) திருவொற்றியூரை சேர்ந்த மாதவன் மயிலாப்பூரில் பேருந்து ஏற சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கி இதுவரை 5 பேர் பலி
மின்சாரம் தாக்கி இதுவரை 5 பேர் பலி

மேலும், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த திருநாவுக்கரசு லாரி ஓட்டி சென்ற போது தரமணி அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். மேலும் திருவொற்றியூரை சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவியான கமலி நேற்று முன்தினம் (நவ.11) கடைக்குச் சென்ற போது தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

இந்த நிலையில் நேற்று திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையைச் சேர்ந்த சக்திவேல் (81) என்பவர் மந்தைவெளி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வந்தார். சக்திவேல் நேற்று (நவ.12) காலை காவல் பணி முடித்துவிட்டு மந்தைவெளி பஸ் டிப்போ சிக்னல் வழியாக நடந்து வந்துகொண்டிருந்தார்.

அப்போது அங்குத் தேங்கியிருந்த தண்ணீர் நிறைந்த பாதையில் சக்திவேல் நடந்து வந்த போது அருகே இருந்த சிறிய மின் பெட்டியில் மின்சார ஒயரில் கால் வைத்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையும் படிங்க: கனமழையால் சேதமடைந்த சாலை - ஆபத்தான முறையில் சாலையைக் கடக்கும் கிராம மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.