ETV Bharat / city

மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண நிதி: அரசு பதிலளிக்க உத்தரவு - மின்வாரியம்

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் 5,000 ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண நிதி, மளிகைப் பொருள்களை வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

highcourt
highcourt
author img

By

Published : May 25, 2020, 2:20 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் தாக்கல்செய்யப்பட்ட மனுவில், "2011ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட இச்சங்கத்தில், 1995ஆம் ஆண்டுமுதல் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் பணிபுரிந்துவரும் 5000 பேர் தற்போது உறுப்பினர்களாக உள்ளனர்.

தமிழ்நாட்டில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய தானே, வர்தா, ஒக்கி, கஜா போன்ற புயல் பாதிப்புகளின்போது, மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தினக்கூலி அடிப்படையில் இரவு பகலாக மின் தடங்களைச் சீரமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில், கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று காரணமாக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுவருகிறது. இதனால், மின் வாரியத்தில் தினக்கூலி, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் ஊழியர்கள் போதுமான வருமானம் இல்லாமல் அடிப்படை தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளனர்.

தமிழ்நாடு அரசு கடந்த ஏப்ரல் 8, 14ஆம் தேதிகளில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அவசரகால நிவாரண நிதியாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று இரண்டு தவணைகளாக 2000 ரூபாயை இதுவரை விடுவித்துள்ளது.

பதிவுசெய்யப்பட்ட தங்கள் சங்கத்திற்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும் என மின் பகிர்மான கழகத் தலைவர், மேலாண்மை இயக்குநருக்கு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

எனவே, தங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஒப்பந்த பணியாளர்களுக்கு தலா 2,000 ரூபாயையும், மளிகைப் பொருள்களையும் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், பி.டி. ஆஷா அமர்வு, இது குறித்து தமிழ்நாடு அரசு மே 29ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் கரோனா: பணியாளர்கள் அச்சம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.