ETV Bharat / city

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர் தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியல் - தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல்

சென்னை: தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல்

author img

By

Published : Jul 14, 2021, 7:08 AM IST

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டைச் சார்ந்த முஸ்லிம் சட்டப் பேரவை உறுப்பினர்களின் பட்டியல் பெறப்பட்டு, வக்ஃபு வாரியத்திற்கு தேர்தல் நடத்துவதற்கு வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் குறித்த வரைவு வாக்காளர் பட்டியலின் நகல் 2021 ஜூலை 14 அன்று தமிழ்நாடு வக்ஃப் வாரிய (உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்துதல்) விதிகள் 1997, விதி 5–ன்படி கீழ்க்காணும் அலுவலகங்களின் அறிவிப்பு பலகைகளில் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது:-

1. தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலர் அலுவலகம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாமக்கல் கவிஞர் மாளிகை, இரண்டாவது தளம், தலைமைச் செயலகம், சென்னை-600 009.

2. முதன்மைச் செயல் அலுவலர் அலுவலம், தமிழ்நாடு வக்ஃப் வாரியம், எண்.1, ஜாபர் சிராங் தெரு, வள்ளல் சீதக்காதி நகர், சென்னை-600 001.

3.அனைத்து மண்டல வக்ஃபு கண்காணிப்பாளர்களின் அலுவலகங்கள்.

4. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளம்.

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல்

5 இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் சேரத் தகுதியுள்ள எந்தவொரு நபராவது தங்களின் பெயர் சேர்க்கப்பட்டது அல்லது சேர்க்கப்படாதது தொடர்பான ஆட்சேபணைகளை இவ்வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு வார காலத்திற்குள் அதாவது 2021 ஜூலை 20 அன்று மாலை 3.00 மணிக்குள் தேர்தல் அதிகாரிக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

6 இவ்வாறு பெறப்படும் ஆட்சேபணைகளை ஆய்வு செய்து உரிய ஆணைகள் தேர்தல் அதிகாரியால் வெளியிடப்படும். அவை இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

7 தேர்தல் நடத்துவது தொடர்பான கால அட்டவணை தனியே வெளியிடப்படும். இதற்கான அறிவிக்கை தேர்தல் அதிகாரியால் தமிழ்நாடு அரசிதழில் விரைவில் வெளியிடப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.