சென்னை: அம்பத்தூர் அருகே ஒரகடம், கே.கே.சாலை பகுதியில் உள்ள ராஜன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் நள்ளிரவில் கதவை உடைத்து ரூ.87 ஆயிரம் பணம் திருடப்பட்டுள்ளது. அதனை காலையில் கடை திறக்கும்போது அறிந்த ராஜன் போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதனிடையே கடையின் சிசிடிவி காட்சிகளில், 2 பேர் நள்ளிரவில் கையில் இரும்பு ராடு கொண்டு வந்து கடையில் பூட்டை உடைத்து உள்ளே செல்வதும், பின் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.87 ஆயிரம் பணத்தை திருடுவதும் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவியின அடிப்படையில் அம்பத்தூர் T1 போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: வீடியோ: 600 கிலோ வெடிப்பொருள்... 6 வினாடிகள்... சாந்தினி சவுக் பாலம் தகர்ப்பு...