ETV Bharat / city

எந்திரன் கதை திருட்டு வழக்கில் இயக்குநர் ஷங்கருக்கு பிடியாணை: நீதிமன்றம் அதிரடி - Writer Aroor Tamilnadu

சென்னை: கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்திரன் கதைத்திருட்டு வழக்கில் முன்னிலையாகாமல் வழக்கை இழுத்தடித்துவரும் இயக்குநர் ஷங்கருக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அதிரடியாகப் பிடியாணை (பிடிவாரண்ட்) பிறப்பித்திருக்கிறது.

எந்திரன்
எந்திரன்
author img

By

Published : Jan 30, 2021, 8:58 PM IST

கடந்த 1996ஆம் ஆண்டு 'இனிய உதயம்' தமிழ்ப் பத்திரிகையில் நக்கீரன் இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் எழுதிய 'ஜுகிபா' என்ற கதை வெளியானது. அதே கதை மீண்டும் ‘தித் திக் தீபிகா’ என்ற புதினத்திலும் 2007ஆம் ஆண்டு வெளியானது.

இந்நிலையில் 2010ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் 'எந்திரன்' திரைப்படம் வெளியான பின்புதான் ’ஜுகிபா’ கதை திருடப்பட்டு, எந்திரன் திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எந்திரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் ஆகிய இருவருக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினார்.

அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வராத நிலையில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், எந்திரன் படத்தின் இயக்குநர் ஷங்கர் மீதும், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மீதும் காப்புரிமைச் சட்டப்படி புகார் அளித்திருந்தார்.

1996இல் தான் எழுதிய கதையைத் திருடி எந்திரன் திரைப்படத்தை எடுத்துவிட்டு கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும், இது காப்புரிமைச் சட்டத்தின்படி கிரிமினல் குற்றம் என்றும், எனவே இந்த வழக்கில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் புகார் கொடுத்திருந்தார்.

இந்தப் புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட காவல் துறையினர் இறுதியில் எந்த வழக்கும் பதிவுசெய்யவில்லை. இதனால் இந்த வழக்கை எழும்பூர் 13ஆவது நீதிமன்றத்தில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட இருவர் மீதும் குற்றவியல் வழக்குத் தொடுத்திருந்தார்.

இந்த வழக்கில் முன்னிலையாகுமாறு சம்பந்தப்பட்ட இருவருக்கும் எழும்பூர் 13ஆவது நீதிமன்றம் 2011இல் அழைப்பாணை அனுப்பியது. அந்த அழைப்பாணை அடுத்து இயக்குநர் ஷங்கரும் கலாநிதிமாறனும், அந்தச் சட்டப்படி செல்லாது என்றும் நாங்கள் கதையைத் திருடவில்லை என்றும் கூறி, அந்தக் குற்றவியல் வழக்குச் செல்லாது என்று உத்தரவிடும்படி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முறையிட்டனர்.

எழும்பூர் நீதிமன்ற வழக்கிற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்து இருந்தது. இந்த நிலையில் எந்திரன் தொடர்பான சிவில் வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

அந்த வழக்கில் 2019 ஜூன் 06ஆம் தேதியன்று நீதிபதி புகழேந்தியால் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் கலாநிதிமாறன் மீது எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தொடுத்த வழக்குச் செல்லாது எனவும், இயக்குநர் ஷங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின்கீழ் இந்த வழக்கை நடத்த முகாந்திரம் உள்ளது என்றும் கூறிய நீதிமன்றம், கதை ஒரே மாதிரி இருப்பதாகக் கூறி கதைக்கும் சினிமாவுக்கும் உள்ள 16 ஒற்றுமைகளைப் பட்டியலிட்டுக் காட்டி அதன்மூலம் காப்புரிமை மீறல் அப்பட்டமாகத் தெரிகிறது.

அதனால், எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஷங்கருக்கு எதிரான வழக்கை காப்புரிமைச் சட்டப்படி தொடர்ந்து நடத்தலாம் என்று உத்தரவிட்டது. இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்க இருந்த நிலையில் கரோனா பேரிடர் காரணமாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இயக்குநர் ஷங்கர் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

ஆனால், உச்ச நீதிமன்றம் ஷங்கரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து கடந்த அக்டோபர் மாதம் உத்தரவிட்டிருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.