ETV Bharat / city

தமிழ்நாட்டில் மீண்டு(ம்) ஒலிக்கும் ஈழ தமிழர் படுகொலை விவகாரம்! - தமிழர் படுகொலை ராஜபக்ச

சென்னை: ஈழ தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசு குறித்த கண்டன குரல்கள் தமிழ்நாட்டில் சிறிது காலம் ஓய்ந்திருந்த நிலையில், கோத்தபய ராஜபக்சவின் அதிபர் பதவியேற்புக்கு பிறகு அக்குரல்கள் மீண்டு(ம்) உயிர் பெற்றுள்ளன.

Eelam Tamil massacre
author img

By

Published : Nov 22, 2019, 1:52 AM IST

இலங்கை அரசின் இந்த ஆட்சி மாற்றம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குற்றத்தை ஐ.நா மன்றத்தின் மனிதஉரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அந்த விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தவும் அதிக வாய்ப்புள்ளது. 2009ஆம் ஆண்டு தமிழீழமே தீர்வு என்று தொடர்ந்து போராடி வந்த விடுதலைப் புலிகளை அடியோடு அழிக்க சிங்கள அரசு அதன்மீது போர் தொடுத்தது.

இதில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ராணுவத்தை வைத்து தமிழ் இனத்தை வேரறுத்த சிங்கள அரசின் பேரினவாதத்தை உலக நாடுகள் கண்டித்தன. தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள் வெகுண்டு எழுந்து போராட்டங்கள் நடத்தின. இனப்படுகொலைக்கு காரணமாயிருந்த அதிபர் மஹிந்த ராஜபக்‌ச தண்டிக்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.

அதன்பிறகு நடந்த தேர்தலில் மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்று இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் தமிழ்நாட்டில் இனப்படுகொலை மற்றும் சிங்கள அரசு குறித்த பேச்சுகள் குறையத் தொடங்கின. இதையடுத்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சில அமைப்புகள் மட்டுமே தமிழீழ இனப்படுகொலை குறித்து அவ்வப்போது குரல் எழுப்பி வந்தன. இவ்வாறு ஓய்ந்திருந்த குரல்கள் தற்போது மீண்டும் ஓலிக்க தொடங்கியுள்ளன. இதற்கு அண்மையில் வெளியான இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளே காரணம்.

இலங்கையில் நடந்து முடிந்துள்ள அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்‌சே வெற்றி பெற்றுள்ளார். இவர் முள்ளிவாய்க்கால் படுகொலையை நிகழ்த்திய மகிந்த ராஜபக்‌சவின் சகோதரராவார். அதுமட்டுமின்றி இனப்படுகொலையின் போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்து ராணுவத்தை ஏவியதும் இவர்தான். எனவே இவர் தற்போது அதிபராகி இருப்பது தமிழீழ உணர்வாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாள் தமிழ் இனத்துக்கு ஒரு துயரமான நாள். தமிழர்கள் அடையாளமே இல்லாமல் செய்வதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்வதற்கு கோத்தபய ராஜபக்‌ச துடித்துக்கொண்டு இருப்பான் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இது குறித்த முதல் கண்டனத்தை பதிவு செய்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோத்தபய ராஜபக்‌சவின் வெற்றியை, இன்றைய சூழலில் ஜனநாயக ரீதியாக கடந்து போகவும் முடியாது. அவரின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர்கள் ஈழத் தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாத்திட அனைத்து நடவடிக்கைகளையும் தொடக்கத்திலிருந்தே மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஒத்தக் கருத்துள்ளோர் ஒன்றுக்கூடி ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இவர்கள் மட்டுமின்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரும் கோத்தபய ராஜபக்ச பதவி பொறுப்புக்கு வருவது குறித்தும் ஈழ தமிழர் நிலை குறித்தும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இவ்வாறாக ஈழத் தமிழர் படுகொலையும் அதற்கான நீதியும் தற்போது மீண்டும் தமிழ்நாட்டின் பாடுபொருளாக அனைத்து தலைவர்களாலும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்‌ச மகனும் இலக்கை நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்‌ச, தமிழ் தலைவர்கள் இலங்கை தமிழரின் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வதாக அரசியல் செய்வதை விடுத்து அவர்களின் எதிர்காலத்துக்காக பொறுப்புடன் செயல்படுங்கள் என்று கூறியுள்ளார்.

Eelam Tamil massacre
கோத்தபய ராஜபக்‌ச

இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் அமெரிக்க அமைச்சரவை செயலாளர் கோத்தபய ராஜபக்‌சவின் அரசுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கோத்தபய அரசு மனித உரிமைக்கு மதிப்பு அளிக்கக்கூடிய அரசாக நடந்துகொள்ள வேண்டும். மீண்டும் வன்முறையை ஊக்குவிக்கும் அரசாக செயல்படக்கூடாது என்று கூறியுள்ளார். இதன்மூலம் தமிழ்நாட்டு தலைவர்களின் பார்வை மட்டுமல்ல உலக தலைவர்களின் பார்வையும் இலங்கை அரசின் மீதும் இனப்படுகொலையின் மீதும் விழத் தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக சர்வதேச மன்றத்தில் மீண்டும் தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி கேட்டு ராஜபக்ச அரசின் மீது கண்டன குரல்கள் எழுவதற்கு வாய்ப்புள்ளன. தமிழீழ இனப்படுகொலையில் சர்வதேச ஐக்கிய மன்றத்தின் மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தின. அதனடிப்படையில் விசாரணை தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இலங்கை அரசியலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இந்த விசாரணை குறித்த உலகநாடுகளின் குரல்களும் ஓய்ந்துவிட்டன. இந்த சூழலில் இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்‌ச பதவியேற்றிருப்பது உலகநாடுகளின் பார்வையை இனப்படுகொலைக்கான நீதியை நோக்கி விழச் செய்வதற்கும் அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : ஈழம் குறித்து பேச வைகோவிற்கு மட்டுமே தகுதி உண்டு: சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி

Intro:Body:ஈழ தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசு குறித்த கண்டன குரல்கள் தமிழகத்தில் சிறிது காலம் ஓய்ந்திருந்த நிலையில் தற்போது கோத்தபய ராஜபக்சே அதிபராய் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அக்குரல்கள் மீண்டும் உயிர்பெற்று ஒலித்து வருகிறது. 

அதேபோல் இலங்கை அரசின் இந்த ஆட்சி மாற்றம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குற்றத்தினை ஐ.நா மன்றத்தின் மனிதஉரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அமரிக்க, ஐராப்பிய நாடுகள் அந்த விசாரணையை துரித்தப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தவும் அதிக வாய்ப்புள்ளது. 

கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழீழமே தீர்வு என்று தொடர்ந்து போராடி வந்த விடுதலைப் புலிகளை அடியோடு அழிக்க சிங்கள அரசு அதன்மீது போர் தொடுத்தது. இதில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ராணுவத்தை வைத்து தமிழ் இனத்தை வேரறுத்த சிங்கள அரசின் பேரினவாதத்தை உலக நாடுகள் கண்டித்தன. தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் வெகுண்டு எழுந்து போராட்டங்கள் நடத்தின. இனப்படுகொலைக்கு காரணமாயிருந்த அதிபர் மஹிந்த ராஜபக்‌சே தண்டிக்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. 

அதன்பிறகு நடந்த தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்று இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் தமிழகத்தில் இனப்படுகொலை மற்றும் சிங்கள அரசு குறித்த பேச்சுகள் குறையத் தொடங்கின. இதையடுத்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சில அமைப்புகள் மட்டுமே தமிழீழ இனப்படுகொலையை குறித்து அவ்வபோது குரல் எழுப்பி வந்தன.

இவ்வாறு ஓய்ந்திருந்த குரல்கள் தற்போது மீண்டும் ஓலிக்க தொடங்கியுள்ளன. இதற்கு அண்மையில் வெளியான இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளே காரணம். இலங்கையில் நடந்து முடிந்துள்ள அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்‌சே வெற்றி பெற்றுள்ளார். இவர் முள்ளிவாய்க்கால் படுகொலையை நிகழ்த்திய மஹிந்த ராஜபக்‌சேவின் சகோதரராவார். அதுமட்டுமின்றி இனப்படுகொலையின் போது பாதுகாபுத்துறை அமைச்சராக இருந்து ராணுவத்தை ஏவியதும் இவர்தான். எனவே இவர் தற்போது அதிபராகி இருப்பது தமிழீழ உணர்வாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நாள் தமிழ் இனத்துக்கு ஒரு துயரமான நாள். தமிழர்கள் அடையாளமே இல்லாமல் செய்வதற்கு என்ன்வெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்வதற்கு கோத்தபாய ராஜபக்‌ஷே துடித்துக்க்கொண்டுதான் இருப்பான் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் இது குறித்த முதல் கண்டனத்தை பதிவு செய்தார்.   

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கோத்தபய ராஜபக்‌ஷேவின் வெற்றியை, இன்றைய சூழலில் ஜனநாயக ரீதியாகக் கடந்து போகவும் முடியாது. அவரின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி அவர்கள் ஈழத் தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாத்திட அனைத்து நடவடிக்கைகளையும் தொடக்கத்திலிருந்தே மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

தமிழ்நாட்டில் ஒத்தக் கருத்துள்ளோர் ஒன்றுகூடி ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். 

இவர்கள் மட்டுமின்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரும் கோத்தபய ராஜபக்ஷே பதவி பொறுப்புக்கு வருவது குறித்தும் ஈழ தமிழர் நிலை குறித்தும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இவ்வாறாக ஈழத் தமிழர் படுகொலையும் அதற்கான நீதியும் தற்போது மீண்டும் தமிழகத்தின் பாடுபொருளாக அனைத்து தலைவர்களாலும் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்‌சே மகனும் இலக்கை நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்‌சே, தமிழ் தலைவர்கள் இலங்கை தமிழரின் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வதாக அரசியல் செய்வதை விடுத்து அவர்களின் எதிர்காலத்துக்காக பொறுப்புடன் செயல்படுங்கள் என்று கூறியுள்ளார். 

இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் அமெரிக்க அமைச்சரவை செயலாளர் கோத்தபய ராஜபக்‌சேவின் அரசுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கோத்தபய அரசு மனித உரிமைக்கு மதிப்பு அளிக்ககூடிய அரசாக நடந்துகொள்ள வேண்டும். மீண்டும் வன்முறையை ஊக்குவிக்கும் அரசாக செயல்படக்கூடாது என்று கூறியுள்ளார்.

இதன்மூலம் தமிழ்நாட்டு தலைவர்களின் பார்வை மட்டுமல்ல உலக தலைவர்களின் பார்வையும் இலங்கை அரசின் மீதும் இனப்படுகொலையின் மீதும்  விழத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சர்வதேச மன்றத்தில் மீண்டும் தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி கேட்டு ராஜபக்சே அரசின் மீது கண்டன குரல்கள் எழுவதற்கு வாய்ப்புள்ளது.

தமிழீழ இனப்படுகொலையில் சர்வதேச ஐக்கிய மன்றத்தின் மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தின. அதனடிப்படையில் விசாரணை தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இலங்கை அரசியலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இந்த விசாரணை குறித்த உலகநாடுகளின் குரல்களும் ஓய்ந்துவிட்டன. 

இந்த சூழலில் இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்‌சே பதவியேற்றிருப்பது உலகநாடுகளின் பார்வையை இனப்படுகொலைக்கான நீதியை நோக்கி விழச் செய்வதற்கும் அதிக வாய்ப்புள்ளது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.