ETV Bharat / city

Education Officials meeting: பள்ளிக் கட்டடங்கள் குறித்து உயர் அலுவலர்கள் ஆலோசனை

Education Officials meeting இடிக்கப்பட வேண்டிய பள்ளிக் கட்டடங்கள் குறித்து கல்வித் துறை உயர் அலுவலர்கள் நாளை (டிசம்பர் 28) ஆலோசனை நடத்துகின்றனர்.

Education Officials meeting
Education Officials meeting
author img

By

Published : Dec 27, 2021, 5:04 PM IST

சென்னை: சென்னையில் நாளை நடைபெறும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் (Education Officials meeting) பாலியல் புகார்கள் குறித்த விவரங்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அரசுப் பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டடங்களின் விவரம் சார்ந்த புள்ளிவிவரங்களுடன் அலுவலர்கள் பங்கேற்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பாலியல் புகார்கள்; ஆசிரியர்கள் கைது, திருநெல்வேலியில் கழிவறை கட்டடம் இடிந்து மூன்று மாணவர்கள் உயிரிழந்தது, இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து நடந்துவரும் ஆய்வுகள் போன்ற பரபரப்பான சூழலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

அதன்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் துறையின் உயர் அலுவலர்களும் பங்கேற்கின்றனர்.

கூட்டத்தில் பங்கேற்க வரும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பல்வேறு புள்ளிவிவரங்களுடன் வர வேண்டும் எனத் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாலியல் புகார்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பள்ளிக் கட்டடங்களுக்குப் பெறப்பட்டுள்ள கட்டட உறுதிச் சான்றிதழ்கள், அரசுப் பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டடங்கள் விவரம் ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும் என ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அரசுத் தேர்வுத் துறையின் சார்பில் பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்யப்படவுள்ளது. மெட்ரிக்குலேஷன் பள்ளியில் அனுமதி பெறாத கட்டடங்கள் குறித்தும் தீவிரமாக ஆலோசனை செய்யப்படவுள்ளது.

இதையும் படிங்க: Omicron Test: 'தமிழ்நாட்டில் மரபணு ஆய்வகத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்'

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.