ETV Bharat / city

பொறியியல் படிப்பில் சேர கட் ஆஃப் 33 மதிப்பெண் வரை குறையலாம் - கல்வி ஆலோசகர் அஸ்வின் - 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

பொறியியல் படிப்பிற்கான கட் ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டை விட 1 முதல் 33 மதிப்பெண் வரை குறையலாம் என கல்வி ஆலோசகர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

கல்வி ஆலோசகர் அஸ்வின்
கல்வி ஆலோசகர் அஸ்வின்
author img

By

Published : Jun 22, 2022, 12:26 PM IST

Updated : Jun 22, 2022, 6:27 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 6 ஆயிரத்து 277 லட்சம் பேர் எழுதியிருந்த நிலையில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதி வெளியானது. அதன்படி, 12 ஆம் வகுப்பில் 93.76% பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகள் உயர்கல்விக்காக மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட பல துறைகளை படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், இந்தாண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரிப்பதால் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் என்னவாக இருக்கும்? பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடம் எவ்வாறு கிடைக்கும் என்பன உள்ளிட்டவற்றை கல்வி ஆலோசகர் அஸ்வின் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வியை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கட் ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டை காட்டிலும் 1 முதல் 33 மதிப்பெண் வரை குறையும் என கல்வி ஆலோசகர் அஸ்வின் தெரிவித்துள்ளார். மேலும் 10, 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 60 %-க்கு குறைவான மதிப்பெண்களை பெற்றவர்கள் பொறியியல் படிப்பில் சேர வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

60% -க்கும் கீழ் மதிப்பெண்கள் பெற்றவர்கள் தயவு செய்து இன்ஜினியரிங் படிக்க வேண்டாம்

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது 93.76 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் சற்று அதிகமாகும்.

பிஇ, பிடெக் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் (ஜூன்20) முதல் ஆன்லைன் மூலம் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழுவால் பெறப்பட்டு வருகிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைகான ஆன்லைன் விண்ணப்பங்கள் நாளை முதல் பெறப்படுகிறது.

இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு முடித்த பின்னர் உயர்கல்வியில் சேர்வதற்கான மதிப்பெண்களில் கட் ஆஃப் மதிப்பெண் குறையுமா? உயருமா? என கல்வி ஆலோசகர் அஸ்வின் கூறும்போது, 'கடந்த ஆண்டுகளின் தரவரிசைப் பட்டியலையும் ஒப்பிட்டு, நடப்பாண்டு மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

அறிவியல் பாடப்பிரிவில் மதிப்பெண் குறைவாகப் பெற்ற மாணவர்கள் அதிகமாக இருக்கின்றனர். கொஞ்சம் அதிகமாக மதிப்பெண் வாங்கிய மாணவர்கள் குறைவாகத்தான் இருக்கின்றனர். 300 மதிப்பெண்ணிற்கும் குறைவாக பெற்ற மாணவர்கள் தான் அதிகளவில் இருக்கின்றனர். பொறியியல் படிப்பில் 60 % மதிப்பெண்களுக்கும் கீழ் பெற்றவர்கள் தயவு செய்து பொறியியல் படிப்பில் சேர்வது பற்றி யோசிக்காதீர்கள்.

எந்த தொழில் நிறுவனத்திற்கு சென்றாலும் 10, 12 ஆம் வகுப்பில் 60 % மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களா? என்பதை பார்ப்பார்கள். எனவே, 600 மதிப்பெண்களுக்கு 360 மதிப்பெண்களுக்கு கீழே இருந்தால் பொறியியல் படிப்பினை தேர்வு செய்யாதீர்கள்.

கடந்தாண்டை விட இந்தாண்டில் கட் ஆஃப் மதிப்பெண் குறையத்தான் போகிறது. கட்ஆப் மதிப்பெண் 1 முதல் அதிகபட்சமாக 33 வரை குறைய வாய்ப்புள்ளது' என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பொறியியல் படிப்பு ஆன்லைன் பதிவு தொடக்கம்; விண்ணப்பிக்கும் முறை - முழு விவரம்!

Last Updated : Jun 22, 2022, 6:27 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.