இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "இந்திய அரசு சித்தாவை அகில இந்திய நிறுவனமாக நிறுவ திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதற்காக நான் இந்திய அரசுக்கு நன்றி கூற விரும்புகிறேன். நடப்பு நிதியாண்டிலேயே தமிழ்நாட்டில் அகில இந்திய சித்தா நிறுவனத்தை நிறுவ கேட்டுக்கொள்கிறோம்.
இந்த நிறுவனத்திற்குத் தேவையான நிலம், நல்ல காற்று, ரயில்பாதை, சாலை இணைப்புடன் உள்ளது. ஏற்கனவே சென்னை நகரத்திற்கு அருகில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்திய அரசுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் வழங்கவும், இது தொடர்பாக, நான் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டேன். இந்திய அரசு ஏற்கனவே மாநில அரசு செயலாளருடன் இது குறித்து உரையாற்றப்பட்டு பதிலுக்காக காத்திருக்கிறது.
இந்த அகில இந்திய நிறுவனம் இன்ஸ்டிடியூட் தமிழ்நாட்டில் நிறுவப்படுவதில் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: எஸ்பிபி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்