சென்னை அடுத்த வேளப்பஞ்சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதில் முதலமைச்சருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி பழனிசாமி, "மாணவர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் மந்திரங்களை பின்பற்ற வேண்டும். தமிழ்நாடு கல்வியில் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது.
புதியதாக 12கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், ஐந்து பாலிடெக்னிக் கல்லூரிகளையும், ஆறு சட்ட கல்லூரிகளையும் தொடங்கியுள்ளோம்.மேலும் தமிழ்நாட்டில் கூடதலாக 1,350 மருத்துவ பட்டப்படிப்பு இடங்களும், 1,213 பட்ட மேற்படிப்பு இடங்களும் ஏற்படுத்தபட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் சார்பில் ஆறு மாவட்ட தலை நகரங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க கோரிக்கை வைத்துள்ளோம். அதனை மத்திய அரசு பரிசீலித்து வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுபோன்ற திட்டங்கள் மூலம் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை 49 சதவிகிதம் உயர்ந்து இந்தியாவிலேயே உயர்கல்வி கற்றலில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது" என்று பெருமிதத்துடன் கூறினார்.
இந்நிகழ்வில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், பரதநாட்டிய கலைஞர் ஷோபனா ஆகியோருக்கும் டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து பல்கலைகழக அளவில் முதல் இடங்களை பெற்ற 150 மாணவர்களுக்கு முதலமைச்சர் பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.
இதையும் படிங்க: 'முரசொலி நில ஆதாரத்தைக் காட்டினால் ராமதாஸ் அரசியலை விட்டு விலகத் தயாரா?' - ஸ்டாலின் மீண்டும் சவால்