ETV Bharat / city

வாழ முடியுமா? அல்லது வாழத்தான் விடுவார்களா?

மதுரை: கடந்த திமுக ஆட்சியின்போது ஏழைகளிடம் இருந்து திமுகவினர் அபகரித்த நிலங்களை எல்லாம் மீட்டுத்தந்தது அதிமுக அரசுதான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

eps
eps
author img

By

Published : Mar 25, 2021, 3:27 PM IST

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர், ”திமுகவினரின் ரவுடித்தனங்களை தொலைக்காட்சிகளின் வாயிலாக நாம் பார்த்திருக்கிறோம். எனவே திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்கள் வாழ முடியுமா அல்லது வாழத்தான் விடுவார்களா?

திமுக என்றாலே ரவுடி கட்சி என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அதிமுக அரசில் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கும் தொழில் செய்வோர் நிம்மதியாக தொழில் புரிவதற்கும் அதிமுக அரசுதான் உறுதுணையாக இருக்கும். ஹோட்டல்களில் சாப்பிட்டால் காசு கொடுக்கும் வழக்கம் திமுகவினருக்கு இல்லை. அப்பாவி மக்கள் பலரது நிலங்களை தங்கள் பெயருக்கு மாற்றி எழுதிக் கொண்டவர்கள் திமுகவினர். பின்னர் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்தபோது ஏறக்குறைய 16 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மீட்டுக் கொடுத்தார்.

வாழ முடியுமா? அல்லது வாழத்தான் விடுவார்களா?

கடந்த திமுக ஆட்சியில் நிலவிய கடுமையான மின்வெட்டு பிரச்சனையை சீரமைத்தது அதிமுக அரசுதான். இந்த முயற்சியின் காரணமாக தற்போது தமிழக அரசு இந்தியாவிலேயே மின் மிகை மாநிலமாக உருவெடுத்துள்ளது. அதே போன்று தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்கின்ற காரணத்தால் நிறைய முதலீடுகள் தமிழகத்தை நோக்கி வரத் தொடங்கியுள்ளன” என்றார்.

இதையும் படிங்க: ’மயிலாப்பூரில் மீனவர்களுக்கே முன்னுரிமை’ - தா.வேலு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.