ETV Bharat / city

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு ரத்து - அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு ரத்து

author img

By

Published : Aug 6, 2021, 8:05 PM IST

சென்னை: முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் அளிக்கப்பட்டன.

இந்தப் புகார்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் பெறுவதற்காக நேரில் ஆஜராகும்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

வழக்கை ரத்துசெய்ய கோரி மனு

இதற்கிடையில் அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சண்முகம் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்த புகார்தாரர்கள், பணத்தை திருப்பி பெற்றுக் கொண்டதாக தெரிவித்தனர்.

வழக்கு ஒத்தி வைப்பு

இதைப் பதிவு செய்த நீதிபதி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள விவரத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின் நகலை சமர்ப்பிக்க உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இதையும் படிங்க: மின் தடை - எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.