ETV Bharat / city

7 மணி செய்திச் சுருக்கம்- Top 10 News@7AM - அம்மா உணவகத்தில் உதயநிதி

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்.

author img

By

Published : Jun 5, 2021, 7:17 AM IST

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்பு

சென்னை: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சி சட்டப்பேரவை பிரதிநிதிகளிடமும் இன்று (ஜூன்.05) கருத்துக் கேட்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்

'ஊரடங்கினால் கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது': ராதாகிருஷ்ணன்

விழுப்புரம்: தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளால் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அம்மா உணவகத்தில் உதயநிதி அதிரடி ஆய்வு

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அத்தொகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் வேண்டுகோள்!

சென்னை: தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒன்றிய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் கே.ஆர் . பெரியகருப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் பால்வளத்துறையிடம் கோரிக்கை!

ஆவின் பால் அதிக விலைக்கு விற்பனையாவதைத் தடுக்க மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கும் விலையிலேயே பால் முகவர்களுக்கும் வழங்கிட வேண்டும் என பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்தடைந்த 50 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள்!

சென்னை : ஹைதராபாத்தில் இருந்து 50 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.

டிஎன்பிஎஸ்சி உடன் டிஆர்பி இணைப்பா? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்படுவதாக வெளியான தகவல்கள் தவறானது என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் விளக்கமளித்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில் உன்னத சேவை: உயிர்களின் பசியாற்றும் நண்பர்கள்

மதுரை: ஊரடங்கு காலத்தில் உணவுக்கு வழியின்றித் தவிக்கும் நாய்கள், குரங்குகள், யானை, மயில்கள் ஆகியவைக்கு இரண்டு நண்பர்கள் சேர்ந்து உணவளித்து பசியாற்றும் நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கைகள ஆய்வு செய்த பிரதமர் மோடி

சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 18-44 வயது பிரிவினருக்கான தடுப்பு மருந்து வழங்கப்படுவது குறித்து பிரதமர் ஆய்வு செய்தார்.

ரஷ்யா, செர்பியாவை இணைத்த ஸ்புட்னிக் தடுப்பூசி!

ஸ்புட்னிக் தடுப்பூசி உற்பத்தி செர்பியாவில் இன்று தொடங்கும் என அந்நாட்டின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான அமைச்சர் நேனாட் போபோவிச் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.