ETV Bharat / city

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM - ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் கரோனாவால் உயிரிழப்பு

ஈ டிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம் இதோ.

TOP 10 NEWS @ 5 PM
TOP 10 NEWS @ 5 PM
author img

By

Published : May 20, 2021, 5:11 PM IST

'மனசாட்சிப்படி' என்று சொல்லி மீண்டும் முதலமைச்சராக பதவியேற்ற பினராயி விஜயன்

கேரள மாநில முதலமைச்சராகத் தொடர்ந்து இரண்டாவது முறை பினராயி விஜயன் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

ஆக்ஸிஜன் விநியோகத்தை கண்காணிக்க சிறப்பு பணிக்குழு

சென்னை: ஆக்ஸிஜன் விநியோகத்தை கண்காணிக்க நான்கு பேர் கொண்ட சிறப்பு பணிக்குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சூரப்பா மீதான அறிக்கை: அரசிடம் அடுத்தவாரம் சமர்ப்பிக்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன்

சென்னை: அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த அறிக்கையை விசாரணை அலுவலரும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியுமான கலையரசன் அடுத்தவாரம் அரசிடம் சமர்ப்பிக்கிறார்.

விவசாயிகளுக்கு சாதகமான சலுகைகளை அறிவித்த தமிழ்நாடு வேளாண் துறை!

சென்னை: விவசாயிகளின் விளை பொருள்களைப் பாதுகாக்க தமிழ்நாடு வேளாண்துறை பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

9 மீனவர்களை மீட்கக்கோரி எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம்!

சென்னை: ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மீனவர்கள் ஒன்பது பேர் கரை திரும்பாத நிலையில், அவர்களை மீட்க உதவி கோரி எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஒரு சாமானிய மனிதனின் குமுறல்!

தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கிடைக்காமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். சாமானிய மனிதர்கள் சுவாசிக்கப் போராடும் போது, தனியார் மருத்துவமனைகள் செல்வம் படைத்தோருக்காகப் படுக்கைகளைப் பதுக்கி வைக்கின்றன.

பள்ளிக் கல்வித்துறையில் சீரமைப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!

சென்னை: பள்ளிக்கல்வி இயக்குநர் பதவியை ரத்து செய்து ஆணையர் பதவி நியமனம் செய்ததற்கு அரசியல் கட்சிகள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்ததன் எதிரொலியாக, முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குநருக்கு வேறு பதவி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

மதுபானங்கள் விற்பனை செய்த நபர் கைது: 720 மது பாட்டில்கள் பறிமுதல்!

ராமநாதபுரம்: திருவாடானை அருகே சட்டவிரோதமாக வீட்டில் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்து வந்த நபரை, காவல் துறையினர் கைது செய்தனர்

ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் கரோனாவால் உயிரிழப்பு!

ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகநாத் பகாடியா கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர், முதலமைச்சர் உட்பட அரசியல் கட்சித் தலைவர் தங்களின் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

’பெருந்தொற்றை எதிர்கொள்ள தொழில்நுட்பம் முக்கியத்துவம் வாய்ந்தது’ - அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்ள தொழில்நுட்பத்தின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.