ETV Bharat / city

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM - மாநில அரசு இடங்களில் சேர்வதற்கு நீட் கிடையாது

ஈ டிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ.

முழு ஊரடங்கு உத்தரவு
முழு ஊரடங்கு உத்தரவு
author img

By

Published : May 23, 2021, 3:18 PM IST

Updated : May 23, 2021, 3:31 PM IST

மாநில அரசு இடங்களில் சேர்வதற்கு நீட் கிடையாது!

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு மத்திய அரசு ஒதுக்கீட்டிற்கு மட்டும் தனியாக நீட் தேர்வினை நடத்திக் கொள்ளுங்கள் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போடுவதில் யாருக்கெல்லாம் முன்னுரிமை?- சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!

சென்னை: கரோனா தடுப்பூசி போட 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் யாருக்கெல்லாம் தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படுகிறது என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

முழு ஊரடங்கு உத்தரவு: சந்தைகளில் அலைமோதிய பொதுமக்கள்!

சென்னை: நாளை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலுக்கு வருவதால் அனைத்து சந்தைகளிலும் ஏராளமானோர் ஒன்று திரண்டனர்.

'ஒரு வார ஊரடங்கால் கிடைக்கும் நன்மையை இரு நாள் தளர்வு தகர்த்து விட்டது' ராமதாஸ் ட்வீட்!

நாளை முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், மக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளில் அலைமோதியதையடுத்து, அதற்கு கண்டனம் தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.

'எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை'- டிடிவி தினகரன் ட்வீட்!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது கரோனா பாதிப்பு இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சமும் கவலையும் ஏற்படுகிறது என,அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளது.

ரூ.51ஆயிரம் நிவாரண நிதி வழங்கிய மூதாட்டி - பெற்றுக்கொண்ட வட்டாட்சியர்

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பழனியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் நிதி வழங்கியுள்ளார்.

மீன் பிரியர்களால் ஸ்தம்பித்துப்போன காசிமேடு!

நாளை(மே.24) முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படவுள்ளதால் இன்று (மே.23) காசிமேடு மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

புதுச்சேரியில் 12 மணி வரை அத்தியாவசிய கடைகள் இயங்கும்

புதுச்சேரி: புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை (மே.31)ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி தற்காலிக சபாநாயகர்: ஓரிரு நாள்களில் பதவியேற்பு!

புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட லட்சுமி நாராயணன், இன்னும் ஓரிரு நாளில் பதவியேற்கவுள்ளார்.

'மல்யுத்த வீரரைச் சுற்றிவளைத்தத் தனிப்படை... சுஷில் குமார் கைது!

டெல்லி: சக வீரரைக் கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த சுஷில் குமாரை, தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

Last Updated : May 23, 2021, 3:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.