ETV Bharat / city

1 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 1PM

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்..

Top 10 news @ 1PM
Top 10 news @ 1PM
author img

By

Published : Jun 27, 2021, 1:11 PM IST

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக குணமடைந்த 57,944 பேர்

இந்தியாவில் நேற்று (ஜூன்.26) ஒரே நாளில் 57 ஆயிரத்து 944 பேர் குணமடைந்ததாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசிமேடு சந்தையில் குறைந்த மீன்வரத்து... ஏமாற்றத்துடன் திரும்பிய அசைவப்பிரியர்கள்

காசிமேடு மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஜூன் 27) மீன் வாங்குவதற்காக ஏராளமான மக்கள் குவிந்தனர். மீன் வரத்து அதிகம் இல்லாத காரணத்தினால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மதுரை கோட்ட 3 ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தேசிய விருது!

மதுரை கோட்டத்தில் பணியாற்றும் மூன்று ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள், தேசிய அளவிலான 'உத்கிருஷ்ட சேவா' விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது பாய்ந்த குண்டாஸ்!

பாலியல் வழக்கில் கைதான தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

'பாகுபலி' யானைக்கு ரேடியோ காலர் பொருத்த ஸ்கெட்ச்!

பாகுபலி யானையைக் கண்காணிக்க அதனைப் பிடித்து ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் முடிவு செய்திருந்த நிலையில், அதன் நடமாட்டத்தைக் கண்டறிய முடியாமல் வனத்துறையினர் குழப்பத்தில் உள்ளனர்.

'விதை மானியத்தைப் பணமாக வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும்' - விவசாயிகள் கோரிக்கை

திருவாரூரில் 2021 குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் விதை மானியத்தை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணமாக வரவு வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காணாமல் போன பாசன வாய்க்கால்: விவசாயிகள் வேதனை

நன்னிலம் அருகே பாசன வாய்க்கால் கடந்த 20 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாததால், தற்போது வாய்க்கால் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

'கல்விக் கட்டணம் பெற அனுமதி வேண்டும்' - தனியார் பள்ளிகள் கோரிக்கை

மாணவர்களிடமிருந்து கல்விக் கட்டணம் பெற அரசு அனுமதி வழங்க வேண்டுமென தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது!

திண்டுக்கல்லில் 14 வ‌ய‌து சிறுமிக்குப் பாலிய‌ல் தொல்லை கொடுத்த‌ இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தன‌ர்.

viral video: நிலத்தகராறு; சகோதரர்கள் சரமாரி மல்லுக்கட்டு

மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் மாவட்டம் ஃபுலாம்ப்ரி தாலுகாவில் உள்ள பால் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சகோதரர்கள் ஜகதீஷ்குமார் குண்டே, சதீஷ் குண்டே ஆகிய இருவரும் நிலத்தகராறு காரணமாக ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.