ETV Bharat / city

ரெய்டில் சிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு? - லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை! - directorate of vigilance and anti corruption

ஊழல், சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளில் (மெய்நிகர் பணம்) முதலீடு செய்துள்ளார்களா என லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி, எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர், kc veermani, sp velumani, c vijayabaskar, mr vijayabaskar
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடா
author img

By

Published : Oct 21, 2021, 11:00 AM IST

சென்னை: தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையினர், இதுவரை நான்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் மற்றும் சொத்துகுவிப்பு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அதில், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், முன்னாள் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு தொடர்பான இடங்களில் அதிரடியாக சோதனைகளை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனைகளில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் காவல்துறையினர் கைப்பற்றப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் மூலம் கணக்கில் வராத சொத்துக்கள், முதலீடுகள் குறிப்பாக வெளிநாட்டு முதலீடுகள் உள்ளிட்டவை இருக்கின்றனவா என்பது குறித்து தீவிரமாக காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடரும் விசாரணை

கோடிக்கணக்கான ரூபாய் கருப்புப் பணத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைப்பதற்கு சமீபகாலங்களில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து பலரும் அரசுக்குத் தெரியாமல் சேர்த்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதனடிப்படையில் ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய அமைச்சர்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை, சொத்துக்களாகவோ, பினாமி பெயரில் சொத்துக்களாகவோ வாங்கியுள்ளார்களா அல்லது வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்து வைத்துள்ளார்களா எனப் பல்வேறு கோணங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், அவர்கள் கிரிப்டோகரென்சியில் முதலீடு செய்து உள்ளார்களா எனவும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

ஒரு பிட் காயின் - ரூ. 50 லட்சம்

இந்தியாவைப் பொறுத்தவரையில் கிரிப்டோகரென்ஸி மீது முதலீடு செய்வது என்பது சட்டவிரோதம் என்றும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் சட்டப்பூர்வமாகவும் மாற்றப்படவில்லை. இதை, சாதகமாக பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாயை முன்னாள் அமைச்சர்கள் கிரிப்டோகரென்ஸி முதலீடு செய்துள்ளார்களா என தீவிரமாக ஆய்வு செய்ய உள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய நிலையைப் பொறுத்தவரையில் ஒரு பிட் காயின் விலை 50 லட்சத்தை தாண்டுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கிரிப்டோகரன்சி மீது முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் இருப்பதால் அவர்களை பயன்படுத்தி தாங்கள் சட்டவிரோதமாக சேர்த்து வைத்த பணத்தை பதுக்கி வைத்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இதையும் படிங்க: விஜய பாஸ்கரின் வங்கி லாக்கரை ஆய்வு செய்ய முடிவு - லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.