ETV Bharat / city

'ஊரடங்கு காலத்தில் 1,05,321 மாற்றுத்திறனாளிகள் பயன் பெற்றுள்ளனர்' - அமைச்சர் சரோஜா - ஊரடங்கு காலத்தில் 1,05,321 மாற்றுத்திறனாளிகள் பயன் பெற்றுள்ளனர்

சென்னை: ஊரடங்கு உத்தரவால் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் மூலம் 1,05,321 மாற்றுத்திறனாளிகளும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் பயன்பெற்றுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா கூறியுள்ளார்.

அமைச்சர் சரோஜா
அமைச்சர் சரோஜா
author img

By

Published : Apr 25, 2020, 10:26 AM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு உதவுவதற்காக 24 மணி நேரமும் சேவை செய்யக்கூடிய உதவிமையம் 26.03.2020 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தின் மூலம் தொடங்கப்பட்டது. இந்த உதவி மையத்தை மாற்றுத்திறனாளிகள் 18004250111, 9700799993 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் அணுகி தேவையான உதவிகள் பெறலாம். இம்மையத்தின் மூலம் இதுவரை 25,616 அழைப்புகள் பதியப்பட்டு 1,05,321 மாற்றுத்திறனாளிகளும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் பயன்பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் 2,44,296 பயனாளிகளுக்கு சமுதாய சமையல் கூடங்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை (ரூ.1,500) பெறும் 1,94,449 மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த தொகையை இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே அவர்கள் பெறும் வகையில் ரூ.58.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பயனாளர்களின் வங்கி கணக்குக்கு செலுத்தப்பட்டுள்ளது. இணையதள சேவை மூலம் 103 பயனாளர்களுக்கு மனநல ஆலோசனை மற்றும் மறுவாழ்வு சிகிச்சைக்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பெறப்பட்ட அழைப்புகளில், உடல்நலம் பற்றிய ஆலோசனைகளும் அத்தியாவசியப் பொருட்கள் பெறுதல் குறித்த விளக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.

மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் சிறப்பு பள்ளிகளில் தங்கியுள்ள 6,552 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் பால் பொருட்கள் அடங்கிய உணவுப் பொட்டலங்கள் ரூ.16.67 லட்சம் செலவில் வழங்கப்பட்டது. 130 மனநலம் பாதிப்படைந்தோர் ( 85 ஆண்கள் மற்றும் 45 பெண்கள்) மீட்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் ரூ.900 செலவில் உணவும் ரூ.200 செலவில் போக்குவரத்து மற்றும் ஆடைகளுக்கான செலவு மேற்கொள்ளப்பட்டது.

தொற்றுநோய் பரவுதலைத் தடுக்கும் செயல் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் மற்றும் 145 தன்னார்வதொண்டு நிறுவனங்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு, 2,155 கிராமங்கள், 1,116 கிராம பஞ்சாயத்து, 675 நகர்புற மாநகராட்சி மற்றும் 13 பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 34 மாட்டங்களிலும் செயல்பட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

24.03.2020 முதல் 03.05.2020 வரையிலான ஊரடங்கு காலத்தில், அரசின் அத்தியாவசியப் பணிக்கான துறையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்கள் அலுவலக பணிகளில் கலந்துகொள்வதிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளித்து இரண்டு கட்டங்களாக அரசாணைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உதவிப்பொருட்களை வாகனத்தில் கொண்டுச் சேர்த்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் நடமாடும் சிகிச்சைப் பிரிவு வாகன பணியாளர்களுக்கு (ஓட்டுநர் மற்றும் உதவியாளர்) ஒரு மாத மதிப்பூதியம் வழங்க ரூ.4.80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

6,475 தவழும் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட உபயோகத்திற்கான கையுறைகள், முழங்கால் உறை மற்றும் காலுறைகள் ரூ.21.04 லட்சம் செலவில் கொள்முல் செய்யப்பட்டு மாவட்டங்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, மாற்றுத்திறனாளிகள் நலனில் அதிக அக்கறை கொண்டு இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்திரவிட்டுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.