ETV Bharat / city

'அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள்'- துரைமுருகன் தகவல்! - DMK Government build 1000 dams

தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

துரைமுருகன்
துரைமுருகன்
author img

By

Published : Apr 6, 2022, 6:57 PM IST

சென்னை: நீர்வளத் துறை மீதான மானியக் கோரிக்கைகளுக்கு பதிலுரையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், நான் கோபாலபுரத்து விசுவாசி என்றும் இத்துறையை கேட்டுப் பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். தொடர்ந்து, “அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும்” என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

5 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள்: “நீர்வளத்துறை என்பது என் உயிருடன் உடலுடன் கலந்த துறை என்று குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர் துரைமுருகன், தடுப்பணைகள் வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோரிக்கை வைப்பதாகவும், அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அடுத்த 5 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்றும், அனைத்து தொகுதிகளிலும் ஒரு தடுப்பணை கட்ட வேண்டுமென்பது தனது ஆசை எனவும் துரைமுருகன் கூறினார். அதிமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கு, திமுக ஆட்சியில் வட்டி கட்டும் நிலை இருப்பதாகவும்” தெரிவித்தார்.

கருவேல மரங்களை அகற்றினால் பரிசு: இதையடுத்து, “ஏரிகளில் கருவேல மரங்கள் இருப்பதால் நீர் கெட்டு போய்விடுகிறது. எனவே ஒவ்வொரு தொகுதியிலும் ஏரிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு மேற்கொள்பவர்களுக்கு பரிசு கூட வழங்கலாம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
இதே போல அரசாணை மற்றும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு இருந்தாலும், விவசாயிகள் மண் எடுக்க முடியாத நிலையும், அதே போல செங்கல் சூளைக்கு மண் எடுப்பதிலும் சிரமங்கள் இருப்பதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர். அதற்கு விவசாயிகளுக்கும், செங்கல் சூளைக்கும் மண் எடுக்க கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்திரவாதம் அளிப்பதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

இதையும் படிங்க : 'தாலிக்குத் தங்கம் திட்டத்தைக் கைவிடக்கூடாது' - கூட்டணியில் இருந்து திமுகவிற்கு எதிராக ஒலித்த கலக குரல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.