ETV Bharat / city

கரோனா வைரஸ் பரவல் - மாற்றம் அடையும் ஐடி நிறுவன கட்டமைப்பு! - ஐடி நிறுவனங்கள்

சென்னை: ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதால் நிர்வாகச் செலவில் பெருமளவில் மிச்சம் ஏற்படுவதையடுத்து, இனி வரும் காலங்களில் ஐடி நிறுவனங்கள் தங்கள் நடைமுறையை மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளதாக, அத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

companies
companies
author img

By

Published : Apr 30, 2020, 7:37 PM IST

தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்றாலே பெரிய கட்டடங்கள், உயர் சொகுசு வசதிகள் என்ற எண்ணம் பலருக்கு வரும். அதுவே உண்மையும் கூட. 24 மணி நேரமும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இவை, தற்போது ஊரடங்கால் மூடப்பட்டு பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் இது பெரிதாக பேசப்பட்டாலும், வீட்டிலிருந்து பணிபுரியும் முறையே நிர்வாகச் செலவுக்கு மிச்சத்தை ஏற்படுத்துவதாக கருத்து நிலவுகிறது. எனவே, இது இனி வரும் காலங்களில் ஐடி நிறுவனங்களின் நடைமுறையை மாற்றி அமைக்க வாய்ப்பு உள்ளதாக பலர் கூறுகின்றனர்.

பெரிய ஐடி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கில் பணியாளர்கள் வேலையில் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வேலைக்கு வரவும், பின்பு வீடு திரும்பவும் குளிர் சாதனப் பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அலுவலகம் முழுமைக்கும் ஏசி வசதி செய்யப்பட்டிருக்கும்.

ஊழியர்கள் உணவு, சிற்றுண்டி உண்ண உயர் ரக கேண்டீன் வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் இந்நிறுவனங்களில் தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியச் செலவுகள் அதிகம் ஏற்படுவது இயல்பு. இந்நிலையில், வீட்டில் இருந்து ஊழியர்கள் பணி செய்யும் போது, மேற்சொன்ன செலவுகள் அனைத்தும் குறைகிறது என்பதை ஐடி நிறுவனங்கள் தற்போதைய நிலையில் உணர்ந்துள்ளன.

கரோனா வைரஸ் பரவல் - மாற்றம் அடையும் ஐடி நிறுவன கட்டமைப்பு!

ஊரடங்கின் முதல் 20 நாட்கள் பல ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு பணிகள் ஏதும் கொடுக்காமல் சம்பளம் வழங்கி வந்தனர். பின்னர் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்படுவதை அறிந்த அவர்கள், ஊழியர்கள் இருக்கும் இடத்திற்கே லேப்-டாப் போன்ற வசதிகளை கொரியர் மூலம் அனுப்பி வைத்தனர்.

சில நிறுவனங்கள் ஊழியர்கள் வீட்டிற்கே சென்று பணிபுரிய தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். எனவே, கரோனாவிற்குப் பிறகு ஐடி நிறுவனங்களில் ’வொர்க் ஃப்ரம் ஹோம்’ மூலம் புரட்சி ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை எனத் தெரிவிக்கின்றனர் ஐடி ஊழியர்கள்.

ஊரடங்கால், கடந்த 40 நாட்களாக ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிகளை செய்து வருவதில் சில சவால்கள் இருந்தாலும், இதுவும் சாத்தியம் என்பதை இந்த ஊரடங்கு ஐடி நிறுவனங்களுக்கு உணர்த்தியுள்ளது என்றே கூற வேண்டும்.

இதையும் படிங்க: இருபது லட்சம் மதிப்பில் கரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கிய பி.என்.ஒய் ஐடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.