ETV Bharat / city

தமிழ்நாட்டில் மழையின் காரணமாக 4 பேர் உயிரிழப்பு - அமைச்சர் ராமச்சந்திரன்

author img

By

Published : Nov 8, 2021, 10:17 AM IST

தமிழ்நாட்டில் மழையின் காரணமாக 4 பேர் உயிரிழந்ததுள்ளதாகவும், 260 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராமச்சந்திரன்
அமைச்சர் ராமச்சந்திரன்

சென்னை எழிலகத்திலுள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திலிருந்து நேற்று (நவ.07) தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 9, 10, 11 ஆகிய தேதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும்.

இந்த மூன்று தேதிகளிலும் மிக அதிகமான கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூண்டி ஏரியில் ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. புழல் ஏரியில் ௨ ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை நேற்று (நவ.07) காலை முதல் மாலை வரை 27.2 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் மயிலாப்பூர், அம்பத்தூர் பகுதிகளில் அதிக கன மழை பெய்துள்ளது. அதேபோல அயனாவரம், எழும்பூர், தண்டையார்பேட்டை, கிண்டியில் மிக அதிகமாக உள்ளது.

4 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டிலுள்ள 26 மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்துள்ளது. இந்த கனமழை காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் காயமடைந்துள்ளார், 47 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 260 வீடுகள் சேதமடைந்துள்ளது.

சென்னையில் மொத்தம் நிவாரண முகாம் 160 உள்ளது. கடந்த முறை மழை பெய்து எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டதோ அந்த அளவுக்கு தற்போதும் பாதித்துள்ளது. சென்னை, காரைக்காலிலுள்ள ரேடார் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது, வேலை செய்யாமல் இருந்ததாகத் தகவல் வெளிவந்தது அதை உடனடியாக சரி செய்து விட்டோம்.

நீர்த்தேக்கம் ஐந்து நிமிடத்தில் முடிகிற வேலை இல்லை ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் வரை அப்புறப்படுத்தும் பணி ஆங்காங்கே தொடர்ந்து நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.