சென்னை ஏழுகிணறு அம்மன் கோயில் தெருவில் முத்துக்குமார் என்பவர் ஹாட் சிப்ஸ் என்ற பெயரில் இனிப்பகம் நடத்தி வருகிறார். இங்கு, இன்று (செப்.22) மதியம் ஒரு மணியளவில் எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்த தீ சுவற்றில் ஒட்டியிருக்கும் எண்ணெய் படிவத்தில் பற்றியதால், கடை முழுவதும் தீ பரவியது. இதில், ஆயிரக்கணக்கான இனிப்புகள் நாசமாகின.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வண்ணாரப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், பல நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு விரைந்த ஏழுகிணறு காவல் துறையினர், தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெங்களூரு தீ விபத்து: பதைபதைக்க வைக்கும் காணொலி!