ETV Bharat / city

பட்டய பயிற்சி தேர்வு முறைகேடு: 181 ஆசிரியர்களிடம் தீவிர விசாரணை!

சென்னை: தொடக்கக்கல்வி பட்டய பயிற்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியர்கள் 181 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பட்டய பயிற்சி தேர்வு முறைகேடு
author img

By

Published : Nov 6, 2019, 1:07 PM IST

ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வு 2018 ஜூலை மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வினை 15 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். அவற்றில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்களின் விடைத்தாள்களில் உண்மை மதிப்பெண்களுக்குப் பதிலாக, முறைகேடாகத் தேர்ச்சி பெறுவதற்கான 50 மதிப்பெண்கள் போடப்பட்டிருந்ததை தேர்வுத்துறை கண்டுபிடித்தது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவினை வெளியிட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு அரசு தேர்வுத்துறை பரிந்துரை செய்தது.

காதலால் தொலைந்த தலைமைப் பதவி! - ஈஸ்டரின் கதை

அதனடிப்படையில் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளைச் சேர்ந்த 188 ஆசிரியர்கள், தனியார் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த 112 ஆசிரியர்கள் என 300 ஆசிரியர்களுக்கு 17 (பி) பிரிவின் கீழ் விளக்கம் கேட்டு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிக்கை அனுப்பியது.

அதற்காக இணை இயக்குநர்கள் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் தற்போது தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குச் சம்பள உயர்வு, பதவி உயர்வு, பணப்பலன்கள் போன்றவை நிறுத்தப்படும் என்று தெரிகிறது.

கழுதை பாலில் அழகு சாதனப் பொருட்கள்: அசத்தும் கேரள பொறியாளர்!

தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்வு பணியிலிருந்து விலக்கி வைப்பதுடன், அவர்களை பணியிடை நீக்கம் செய்யவும் அறிவுரை வழங்கப்படும் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Intro:பட்டய பயிற்சி தேர்வு முறைகேடு
ஆசிரியர்களிடம் தீவிர விசாரணை

Body:பட்டய பயிற்சி தேர்வு முறைகேடு
ஆசிரியர்களிடம் தீவிர விசாரணை

சென்னை,

தொடக்கக்கல்வி பட்டய பயிற்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளி 181 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வு 2018 ஜூலை மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வினை 15 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். அவற்றில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்களின் விடைத்தாள்களில் உண்மை மதிப்பெண்களுக்கு பதிலாக, முறைகேடாக தேர்ச்சிப் பெறுவதற்கான 50 மதிப்பெண்கள் போடப்பட்டிருந்ததை தேர்வுத்துறை கண்டுபிடித்தது.
அதனைத் தொடர்ந்து அவர்கள் விடைத்தாள் மீண்டும் மறுமதிப்பீடு செய்து தேர்வு முடிவை வெளியிட்டது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு அரசு தேர்வுத் துறை பரிந்துரை செய்தது.

அதன் அடிப்படையில் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை சேர்ந்த 188 ஆசிரியர்கள், தனியார் பயிற்சி பள்ளியை சேர்ந்த 112 ஆசிரியர்கள் என 300 ஆசிரியர்களுக்கு 17 (பி) பிரிவின் கீழ் விளக்கம் கேட்டு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் இணை இயக்குனர்கள் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் தற்போது தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு ,பதவி உயர்வு, பணப்பலன்கள் போன்றவை நிறுத்தப்படும்.

தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்வு பணியில் இருந்து விலகி வைப்பதுடன், அவர்களை பணியிடை நீக்கம் செய்யவும் அறிவுரை வழங்கப்படும் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.