ETV Bharat / city

சென்னையில் ரூ.24 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் - பென்டின்

சென்னை: வடசென்னையில் சட்டவிரோதமாக போதைப் பொருள் விற்பனை செய்து வந்த இருவரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து ரூ.24.96 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனர்.

ரூ 24 லட்சம் மதிப்புள்ள கடத்தல் போதை பொருள் பறிமுதல்!
author img

By

Published : Jul 30, 2019, 4:25 AM IST

சென்னை வானகரம் பேருந்து நிலையத்தில் போதை பொருள்கள் கடத்தி வருவதாக, போதை பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து கடந்த 27ஆம் தேதி அன்று வானகரம் பேருந்து நிலையத்தில் போதை பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ராமேஸ்வரம் செல்லக்கூடிய பேருந்து ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக இருந்தவரை விசாரணை செய்தனர்.

அப்போது, அவர் வைத்திருந்த பையில் பென்டின் என்ற போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், வடசென்னையில் வசிக்கும் நபரிடமிருந்து இந்த போதைப் பொருளை வாங்கியதாக கூறினார்.

உடனே அங்கு விரைந்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர், அந்த நபரின் வீட்டில் சோதனை செய்ததில் 1.5 கிலோ பென்டின் போதைப் பொருளை பறிமுதல் செய்யப்பட்டது. பின் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட போதை பொருளின் மதிப்பு ரூ.24.96 லட்சம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Intro:Body:12கிலோ மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்..
சென்னையில் வான்வழி மற்றும் கடல் மார்க்கமாக போதை பொருள் கடத்துவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து கடந்த 27ஆம் தேதியன்று போதை பொருள் தடுப்பு பிரிவு போலிசார் வானகரத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த போது ராமேஸ்வரம் நோக்கி செல்லக்கூடிய பேருந்தில் சந்தேகத்திற்கிடமாக இருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்..அப்போது அவரது பையில் சோதனை செய்த போது போதை பொருள் வைத்திருந்தது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து அந்த நபரை மேலும் விசாரிக்கையில் வடசென்னை பகுதியில் போதை பொருள் வாங்கியதாக கூறியுள்ளார். அவரிடமிருந்து சுமார் 10.61 கிலோ மெத்தாம்பெண்டைன் போதை பொருளை போதை தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் வடசென்னை பகுதியில் வாங்கியதாக கூறப்பட்ட நபரின் வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுப்பட்டு அவரிடமிருந்து 1.475 கிலோ கெட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.கைப்பற்றப்பட்ட போதை பொருளின் மதிப்பு 24.96 லட்சம் எனவும் போதை பொருள் விற்க பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.மேலும் இவர்கள் கடல் மார்க்கமாக இலங்கை பகுதிக்கு போதை பொருள் சப்ளை செய்து வந்தது அம்பலமாகியுள்ளது.

மேலும் இதேபோல் கடந்த 24ஆம் சென்னை விமான நிலையத்தில் சாக்லேட் உள்ளே மறைத்து ஆஷிஷ் என்ற போதை பொருளை மலேசியாவிற்கு கடத்த முற்பட்ட போது சோதனையில் சிக்கினார்.இதில் 1530 கிராம் போதை பொருளை போலிசார் கைப்பற்றினார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது..

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.