சென்னையில் நாளை இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 வரை முக்கிய ஐந்து இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வேப்பேரி, பெரியமேடு, பார்க் டவுன், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
சென்னையின் குடிநீர் தேவை புறநகர் ஏரிகள் மூலம் பூர்த்தி செய்யப்பட்டுவருகின்றன. குறிப்பாக தென்சென்னை பகுதிகளுக்கு வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
இதையும் படிங்க: குடிநீர் குடித்து உயிரிழப்பு - கர்நாடகாவில் சோகம்