சென்னை: தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் "மக்களைத் தேடி மருத்துவம்" என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் தொடங்கப்பட்டு செப்டம்பர் 11ஆம் தேதி வரை,
- உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுள் – ஒரு லட்சத்து 84ஆயிரத்து 450 நபர்களுக்கும்,
- நீரிழிவு நோய் உள்ளவர்களுள் – ஒரு லட்சத்து 23ஆயிரத்து 949 நபர்களுக்கும்,
- உயர் ரத்த அழுத்த மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களுள் – 83ஆயிரத்து 974 நபர்களுக்கும் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது.
- நோய் ஆதரவு சிகிச்சை 13ஆயிரத்து 74 நபர்களுக்கும்,
- இயன்முறை சிகிச்சை 14ஆயிரத்து 113 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதை தவிர்த்து 42 சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தினால் மொத்தம் 4 லட்சத்து 19 ஆயிரத்து 602 பேர் பயனடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ’100% தடுப்பூசி செலுத்திய கிராமங்கள் ஆயிரத்தை தாண்டும்’ - மா.சுப்பிரமணியன்