ETV Bharat / city

Neocov வைரஸ் பற்றி தவறாக செய்திகளை பரப்ப வேண்டாம் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

உலக சுகாதார துறை அதிகார பூர்வமாக தெரிவிக்கும் வரை Neocov வைரஸ் மனிதர்களுக்கு பரவும் என்ற செய்திகளை தவறாக பரப்ப வேண்டாம் மக்கள் தேவையின்றி பீதி அடைய வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

Neocov
Neocov
author img

By

Published : Jan 30, 2022, 12:09 AM IST

தமிழ்நாடு முழுவதும் இன்று 20வது மெகா தடுப்பூசி முகாம் நிறைவு பெற்ற நிலையில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 10.17 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் தெரிவித்தார்.

அதில் 2.55 லட்சம் நபர்களுக்கு முதல் தவணைத் தடுப்பூசியும் 7. 27 லட்சம் நபர்களுக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமாக 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு 90 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செய்யப்பட்டுள்ளது என்றும் 68% இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு 77 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 2711 ஊராட்சிகளிலும் 24 நகராட்சிகளிலும் 100 விழுக்காடு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைய தொடங்கியுள்ளது.தொற்று குறைவதால் மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது தொடர்ந்து அடுத்த இரண்டு மூன்று வாரங்களுக்கு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், கன்னியாகுமரி, மயிலாடுதுறை திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் நோய்த்தொற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது எனினும் அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் நோய்த்தொற்றின் வேகம் குறையத் தொடங்கும் எனவும் கூறினார். மேலும் மகாராஷ்டிராவில் ஏற்றம் தொடங்கிய மூன்றாவது வாரத்திற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் நோய்த்தொற்று குறைய தொடங்கியுள்ளது.

குறிப்பாக மூன்றாவதுஅலையில் இறப்பு விகிதம் குறைந்து உள்ளதாகவும் நோய் பாதிக்கப்பட்ட நபர்கள் 5 சதவீதம் மட்டுமே மருத்துவமனைக்கு செல்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஜனவரி 1 முதல் ஜனவரி 29 வரை 730 பேர் நோய்த் தொற்றால் இறந்து உள்ளனர் அதில் 435 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மேலும் 60 பேர் முதல் தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்தியவர்கள். அதில் இறந்தவர்களில் 90 சதவீதம் பேர் இணை நோய் உள்ளவர்கள் என்று கூறினார்.

தற்போது வரை தமிழ்நாட்டில் 2.11 லட்சம் நபர்கள் நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 6.72 லட்சம் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Neocov என்ற வைரஸ் வௌவ்வாலுக்கும் வௌவ்வாலுக்கு பரவக்கூடியது. உலக சுகாதார துறை அதிகார பூர்வமாக தெரிவிக்கும் வரை இது மனிதர்களுக்கு பரவும் என்ற செய்திகளை தவறாக பரப்ப வேண்டாம் மக்கள் தேவையின்றி பீதி அடைய வேண்டாம் என்றும் கூறினார்.

தேர்தல் நேரத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி காற்றோட்டமான அறையில் நடத்த வேண்டும் என்றும் 13 வகையான கொரோனா நோய் தடுப்புப் பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.