சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் நிர்வாகி அன்பழகன் நந்தனத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் தனக்கான ஸ்டாலில் (மக்கள் செய்தி மையம்) தமிழ்நாடு அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்பனைக்கு வைத்தார் என்ற காரணத்திற்காக புத்தகத் திருவிழாவை நடத்தும் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் அன்பழகனுக்கும் பாபாசி நிர்வாகிகளுகும் தகராறு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இன்று காலை அன்பழகனை சைதாப்பேட்டை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
![Don't sell books against the government? Anbazhagan Arrested Controversy!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-09-journalist-anpalagan-arrested-issue-no-announcement-of-papasi-script-7204894_12012020183038_1201f_1578834038_973.jpg)
![Don't sell books against the government? Anbazhagan Arrested Controversy!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-09-journalist-anpalagan-arrested-issue-no-announcement-of-papasi-script-7204894_12012020183038_1201f_1578834038_973.jpg)
இந்நிலையில் பத்திரிக்கையாளர் அன்பழகனை அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்கக் கூடாது என்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு அரங்கில் ஸ்டால்கள் கொடுத்ததாகவும், அதனை மீறி அரசுக்கு எதிரான புதகங்களை விற்பனை செய்ததனால் அன்பழகனின் மக்கள் செய்தி மைய அரங்கை வெளியேற்றுவதாகவும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் சண்முகம் தனது லட்டர் பேடில் கையெப்பமிட்ட செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
![Don't sell books against the government? Anbazhagan Arrested Controversy!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-09-journalist-anpalagan-arrested-issue-no-announcement-of-papasi-script-7204894_12012020183038_1201f_1578834038_180.jpg)
அவ்வாறு பாபாசி நிர்வாகத்தின் சார்பில் குறிப்பிடத்தக்க எந்த விபரங்களும் அவர்களது இணையத்தில் குறிப்பிடப்படாத நிலையில் அன்பழகனின் ஸ்டால், புத்தகத் திருவிழா அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த முரண்பாடுகள் தொடர்பாக பாபாசியின் தலைவர் சண்முகத்தை தொடர்பு கொண்டபோது அவர் பதில் கூற மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க: பத்திரிகையாளர் வி.அன்பழகன் பொய் வழக்கில் கைது- சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்...